For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டம் எல்லோருக்கும் சமம்... வேட்பாளர்களுக்கு தனி சலுகை காட்ட முடியாது - ரிசர்வ் வங்கி

5 மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வங்கியில் கூடுதலாக பணம் எடுக்க அனுமதியில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கூடுதலாக பணம் எடுக்க அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்துக்கு மறுப்ப

By Super Admin
Google Oneindia Tamil News

டெல்லி: கறுப்பு மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கத்தில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 ஆகிய உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி அறிவித்தது. இதையடுத்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுப்பதற்கு உச்சவரம்பை ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது.

இதனால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். நாடு முழுவதும் வங்கி வாசல்களில் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். தற்போது வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு ரூ.10,000 வரையிலும், வாரத்துக்கு ரூ.24,000 வரையிலும் எடுக்க முடியும்.

RBI refuses to raise cash withdrawal limit for candidates

இந்நிலையில், ரிசர்வ் வங்கிக்கு தேர்தல் ஆணையம் கடந்த புதன்கிழமை கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டால் பல்வேறு பிரச்னைகளை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் என்றிருக்கும் பணத்தை திரும்ப எடுப்பதற்கான உச்சவரம்பை வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி வரையிலும் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இந்தக் கோரிக்கையை ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது.

திருமணம் உள்ளிட்ட முக்கிய விழாக்களுக்கு மட்டுமே ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் பொதுமக்களுக்கு கூடுதல் பணம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுக்காக பணத்தை எடுப்பதற்கான உச்சவரம்பை உயர்த்துவது சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தேர்தல் வேட்பாளர்களுக்கு என , வங்கி நிர்ணயம் செய்த தொகையைவிட அதிகளவில் பணம் எடுப்பதுக்கு சலுகை வழங்க முடியாது. சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதான். அவர்கள் தங்களுக்கு கூடுதல் செலவுக்கான பண பரிவர்த்தனையை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலவு செய்து கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இதையடுத்து, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு தனது கோரிக்கையை முன்வைத்து தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில், தனது கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

English summary
EC Commission had requested RBI to enhance the withdrawal limit of candidates to Rs 2 lakh from Rs 24,000 per week imposed post demonetisation as the nominees would find it difficult to meet their campaign expenditure.But RBI said that it was not possible for it to hike the limit at this stage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X