2026ல் மார்கெட் கிராஷ்.. முதலீட்டாளர்களுக்கு பயத்தை கொடுத்த பெரிய புள்ளி.. தப்பிக்க என்ன வழி?

Subscribe to Oneindia Tamil

சர்வதேச முதலீட்டு சந்தை நாளுக்கு நாள் மோசமாகி வரும் வேளையில் மக்கள் எதில் முதலீடு செய்ய வேண்டும் என்று குழம்பி வரும் வேளையில் 2026ல் முதலீட்டு சந்தை மொத்தமாக கிராஷ் ஆக போகிறது என்ற கருத்து நிலவி வருகிறது.

பிரபல நிதி நிபுணரும் 'ரிச் டாட் புவர் டாட்' புத்தக ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி 2026-ம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

இந்த மார்கெட் கிராஷ்-க்கு தயாராக உள்ள முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி என்றும், தயாராக இல்லாதவர்களுக்கு கெட்ட செய்தி என்றும் ராபர்ட் கியோசாகி கூறியுள்ளார். இந்த எச்சரிக்கை வெளியான உடனே சில முக்கிய அறிவிப்புகள் சந்தையில் வெளியானது கவனிக்ககூடியதாக உள்ளது.

silver stock market economy 2026 2026 Global Economic Crash Robert Kiyosaki Warning Gold Silver Investment 2026 India Import Duty Hike Silver Best Investment robert kiyosaki 2026 economic crash warning silver best investment 2026 gold silver bitcoin hard assets india gold import duty 15 percent west asia crisis precious metals rising crude oil inflation rupee weakness global recession fears 2026 rich dad poor dad author prediction kiyosaki silver investment since 1965 india current account deficit gold precious metals demand india 2026 mcx gold silver price surge retail investors precious metals 2026 economic instability gold silver protection central bank decisions impact on gold 2026 2026 1965 MCX

கியோசாகியின் கணிப்பு

ராபர்ட் கியோசாகி தனது எக்ஸ் பதிவில், "சிறந்த முதலீட்டாளர்களால் எதிர்காலத்தை முன்கூட்டியே பார்க்க முடியும்" என்று கூறியுள்ளார். 1965-ம் ஆண்டில் இருந்து தான் வெள்ளி வாங்கத் தொடங்கியதாகவும், அப்போது அதன் விலை மிகக் குறைவாக இருந்தது, 2026-ல் வெள்ளி தனது சிறந்த முதலீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

2026-ம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கும் பட்சத்தில் பாதுகாப்பான அதேநேரத்தில் லாபம் தரக்கூடிய சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும்.

ராபர்ட் கியோசாகி இதற்காக பரிந்துரைப்பது தங்கம், வெள்ளி, பிட்காயின் போன்ற கடின சொத்துக்களை (hard assets) முதலீடு செய்ய மக்களை வேண்டுகிறார். பணவீக்கம், கடன் நெருக்கடி, நாணய மதிப்பு வீழ்ச்சி நடக்கும் காலங்களில் இந்த சொத்துக்கள் மதிப்பு அதிகரிக்கும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

தற்போது உலகளவில் பிரச்சனை முதலீட்டு சந்தையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கிறது, இந்தியாவில் வரி உயர்வு, மேற்கு ஆசிய மோதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க அச்சம், நாணய வீழ்ச்சி, மத்திய வங்கி முடிவுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை அச்சம் ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி விலையை உயர்த்தும் காரணிகளாக உள்ளன.

ராபர்ட் கியோசாகி காலம் காலமாக பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்ய கோரியும், இதில் இருக்கும் சாதகங்களை முன்வைத்து பல பதிவுகளை செய்து வருகிறார். இதேவேளையில் போர் - பணவீக்க காலக்கட்டத்தில் முதலீடு சந்தை மந்தமாகும் இது இயல்பான ஒன்று, ஆனால் மற்ற காலக்கட்டத்தில் பங்குச்சந்தை முதலீடுகள் தான் பெரும் லாபத்தை தருகிறது. இதை கடந்த 50 ஆண்டு தரவுகள் ஆணித்தனமாக சொல்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+