இது தான் புது டிரெண்ட்! ப்ரீமியம் மொபைல்களை செகண்ட் ஹேண்ட்டில் வாங்கி குவிக்கும் மக்கள்! ஏன் அப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் இப்போது புதிய டிரெண்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது ப்ரீமியம் ரேஞ்ச் மொபைல் மாடல்களை refurbished செய்து பல கம்பெனிக்கள் விற்கும் நிலையில், அதை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்களாம். இந்த புதுப்பிக்கப்பட்ட மொபைல்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவில் இப்போது பண்டிகை கால விற்பனை ஆரம்பித்துவிட்டது. பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் ஆஃபர்களை போட்டிப் போட்டுக் கொண்டு வாரி வழங்குகின்றன.

technology business

புதிய டிரெண்ட்: நம்ம ஊரில் பெரும்பாலான மக்கள் இதுபோன்ற தள்ளுபடி காலத்தில் தான் பொருட்களை வாங்குவார்கள். குறிப்பாக ஸ்மார்ட்போன் விற்பனை இந்த சீசனில் தான் அதிகரிக்கும். சில காலத்திற்கு முன்பு வரை புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கவே மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால், இப்போது இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் வித்தியாசமான ஒரு டிரெண்ட் காணப்படுகிறது. அதாவது பிரீமியம் ரேஞ்ச் எனப்படும் ரூ. 20,000க்கு மேல் விற்பனை செய்யப்படும் பிரிவில் மக்கள் refurbished மொபைல்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்களாம்.

என்ன அர்த்தம்: Refurbished என்றால் என்னவென்று கேட்கிறீர்களா.. அனைவருக்கும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் செகண்ட் ஹேண்ட் மொபைல்.. ஆனால், Refurbished மொபைல்களை சம்பந்தப்பட்ட நிறுவனமே வாங்கி, அதில் உள்ள பிரச்சினைகளைச் சரி செய்து மீண்டும் விற்கும். சம்பந்தப்பட்ட நிறுவனமே மொபைலை வாங்கி பிரச்சினைகளைச் சரி செய்வதால் நம்பி வாங்கலாம். இதற்கும் குறிப்பிட்ட வாரண்டியும் கிடைக்கும். இதன் மூலம் ப்ரீமியன் ரேஞ்சில் விற்கப்படும் மொபைல்களை குறைந்த விலைக்கு நம்மால் வாங்க முடியும்.

புதிய மொபைலை வாங்கும் போது எக்ஸ்சேஞ்ச் என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். பெரும்பாலும் அதில் நாம் தரும் மொபைல்களே இப்படி Refurbished அதாவது புதுப்பிக்கப்பட்ட மொபைலாக மீண்டும் சந்தைக்கு வருகிறது. இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறதாம். ஒவ்வொரு ஆண்டும் அதன் விற்பனை சுமார் 25-30% வரை அதிகரித்துள்ளது. முன்பே குறிப்பிட்டது போலக் குறைந்த விலை, தர உத்தரவாதம் உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

அதிகரிக்கும் விற்பனை: இந்த புதுப்பிக்கப்பட்ட மொபைல் விற்பனையில் ஆப்பிள், சாம்சங், கூகுள் நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்களின் விலை உயர்ந்த மாடல்களே அதிகம் விற்பனையாகிறதாம். இப்போது இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் சுமார் 10-15% வரை இந்த புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களே உள்ளன.

இவை வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளன. மேலும், புதுப்பிக்கப்பட்ட மொபைலுக்காகவே இருக்கும் கேஷிபை, கிஸ்மோபேஷன் உள்ளிட்ட தளங்களும் விற்பனை அதிகரிக்கக் காரணமாக உள்ளது.

எந்தளவு உயரும்: இந்த புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் சந்தை வரும் 2025ம் ஆண்டில் சுமார் ₹25,000 கோடியை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பிரீமியம் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களே சுமார் 40-50% ஆதிக்கம் செலுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களால் நுகர்வோரான நமக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி பல நன்மைகள் உள்ளன. இதன் மூலம் பிரீமியம் மொபைலை அனைவராலும் அணுக முடிகிறது. நிறுவனங்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இந்த டேட்டா எல்லாம் இருக்கட்டும்.. இதுவரை நீங்க எதாவது refurbished மொபைல் வாங்கி இருக்கீங்களானு கமெண்ட் பண்ணுங்க..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+