மனைவியின் பெயரில் "இந்த" திட்டத்தில் முதலீடு செய்தால்.. வரியை சேமிக்கலாம்! இது தெரியாம போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்மில் பலரும் வங்கியில் பணத்தை வைப்பு நிதி மூலம் சேமிப்போம். ஆனால், அதில் குறிப்பிட்ட சதவிகிதத்திற்கு மேல் வட்டி வந்தால் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது போல டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாமல் இருக்க.. நீங்கள் என்ன செய்ய வேண்டும். இதற்கான ரூல்ஸ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

எந்த காலமாக இருந்தாலும் பணத்தைச் சம்பாதிப்பது எந்தளவுக்கு முக்கியமோ.. அதே அளவுக்குப் பணத்தைச் சேமிப்பதும் ரொம்பவே முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இல்லையென்றால் பணம் கைகளில் நிற்கவே நிற்காது.

personanal finance saving

Image: AI created

சேமிக்கும் போதும் கூட சரியான முறையில் நாம் பணத்தைச் சேமிக்க வேண்டும்.. குறிப்பாக அதில் கிடைக்கும் லாபத்திற்குச் செலுத்த வேண்டிய வரி உள்ளிட்டவற்றைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் நமக்கு லாபம் எதுவும் கிடைக்காது. அப்படி அதிக பலன் தரும் ஒரு ஆப்ஷன் குறித்து நாம் பார்க்கலாம்.

முதலீடு: நமது நாட்டில் பெரும்பாலான மக்கள் சேமிப்பது தங்கத்தில் தான். அதற்கு அடுத்து மக்கள் பலரும் தைரியமாக நம்பி முதலீடு செய்யும் ஒன்றாக வைப்பு நிதி, அதாவது fixed deposit இருக்கும். நமது நாட்டில் வங்கிகள் திவாலாகும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் தொடர்ந்து கண்காணிக்கும் என்பதால் எதாவது சின்ன சிக்கல் என்றாலும் உடனடியாக தேவையான நடவடிக்கையை எடுத்துவிடுவார்கள். இதனால் மக்கள் பணம் எப்போதும் பாதுகாப்பாகவே இருக்கும்.

இதன் காரணமாகவே பெரும்பாலான மக்கள் வைப்பு நிதியில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். வழக்கமான சேமிப்பு கணக்கைக் காட்டிலும் வருங்கால வைப்பு நிதியில் நமக்கு அதிக முதலீடு கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம் இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. அது பலருக்கும் தெரியாது. அதாவது மனைவி இல்லத்தரசியாக இருந்தால்.. நீங்கள் அவர்கள் பெயரில் வைப்பு நிதி தொடங்கினால் உங்களால் வரியையும் சேமிக்க முடியுமாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

சேமிப்பை விட "இது" முக்கியம்.. சொல்வது ஆனந்த் சீனிவாசன்! மொத்தமா குடும்பத்திற்கே சிக்கல் வந்துடுமாம்


டிடிஎஸ்: இந்தியாவில் உள்ள வருமான வரி சட்டப்படி, உங்களுக்கு வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி ரூ.80,000க்கு மேல் இருந்தால், டிடிஎஸ் (Tax Deducted at Source) பிடித்தம் செய்யப்படும். அதேநேரம் மனைவி இல்லத்தரசி இருந்து.. அவர்களிடம் வேறு வருமானம் இல்லை என்றால், அந்த வைப்பு நிதியில் இருந்து டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது. இந்த சலுகையைப் பெற ஒருவர் தனது மனைவியின் பெயரில் வைப்பு நிதியைத் தொடங்கி, படிவம் 15G-ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல இந்த சலுகையைப் பெறக் கணவன் மனைவி இணைந்து ஜாயிண்ட் கணக்காகக் கூட வைப்பு நிதி கணக்கைத் தொடங்கலாம்.. இருப்பினும், அதில் மனைவி தான் முதன்மை அக்கவுண்ட் ஹோல்டராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். டிடிஎஸ் வரிச் சலுகை பெற இது ரொம்பவே முக்கியமானதாகும்.

இது முக்கியம்: இதற்காக வங்கியில் நாம் படிவம் 15Gஐ சமர்ப்பிக்க வேண்டும்.. இது 60 வயதுக்குட்பட்ட நபர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். ஆண்டு வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பிற்குக் கீழே உள்ளது என்பதை வங்கிக்குத் தெரிவிக்கும் படிவம் இதுவாகும். இதை நாம் சமர்ப்பித்தால் மட்டுமே டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படாது.

60 வயதைத் தாண்டியவர்கள் என்ன செய்ய வேண்டும்: 60 வயதுக்கு குறைவானவர்களுக்கு மட்டுமே 15G பொருந்தும். ஒருவேளை 60 வயதைக் கடந்து இருந்தால் அவர்கள் 15H என்ற படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அதுவும் ஆண்டு வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பிற்குக் கீழே இருக்கும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இது சாதாரண செய்தி மட்டுமே.. இதை நிச்சயம் யாரும் ஒரு பொருளாதார ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நிதி அல்லது முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை பெறவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+