சேமிப்பை விட "இது" முக்கியம்.. சொல்வது ஆனந்த் சீனிவாசன்! மொத்தமா குடும்பத்திற்கே சிக்கல் வந்துடுமாம்
சென்னை: சேமிப்பின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஆனந்த் சீனிவாசன் முதல்முறையாக சேமிப்பு இரண்டாம்பட்சம் தான் என கூறியுள்ளார். அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன்.. இவர் சேமிப்பின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சேமிப்பு முதன்மையாக இருந்தால் மட்டுமே எந்தவொரு பிரச்சினையிலும் இருந்தும் நாம் தப்ப முடியும் என்பதை அவர் சொல்லி வருகிறார்.

இதற்கிடையே சமீபத்தில் வீடியோ ஒன்றில் அவர், சேமிப்பு இரண்டாம்பட்சம் தான் எனக் கூறியுள்ளார். ஆனந்த் சீனிவாசனே இப்படிச் சொல்லியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
ஆனந்த் சீனிவாசன்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சமீபத்திய வீடியோவில் கூறுகையில், "இந்தியாவில் இந்த இன்சூரன்ஸ் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. வட இந்தியாவில் சுத்தமாகவே இது குறித்து யாருக்கும் தெரியாது. தெற்கு மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் மட்டுமே ஓரளவுக்கு விழிப்புணர்வு இருக்கும்.
பொதுவாக இன்சூரன்ஸ்கள் அனைத்தும் புரோக்கர் மூலமே விற்பனை செய்யப்படும். புரோக்கர் தனக்கு எதில் கமிஷன் அதிகமோ அதை விற்பதிலேயே ஆர்வம் காட்டுவார். அதேபோல இன்சூரன்ஸ் நிறுவனமும் வெறும் டெர்ம் இன்சூரன்ஸ் விற்றால் அவர்களுக்கு லாபம் குறைவு. எனவே, அவனும் முதலீடு போன்றவற்றையே விற்பார்கள். எனவே, இன்சூரன்ஸ் + இன்வெஸ்ட்மெண்ட் என்பது நமக்கு லாபமே இல்லை. எது எந்தவொரு வகையாக இருந்தாலும் சரி.
குடும்பம்: (டெர்ம்) இன்சூரன்ஸின் கான்செப்ட் ரொம்பவே எளிமையானது. அதாவது நாம் இல்லையென்றாலும் குடும்பத்திற்கு எதுவும் ஆகக் கூடாது. அவர்களுக்குப் பணம் கிடைக்க வேண்டும் என்பதையே பார்க்க வேண்டும். இதை நாம் செலவாகவே பார்க்க வேண்டும். ஒரு போதும் முதலீடாகப் பார்க்கக் கூடாது. இதை முதலீடாகப் பார்ப்பது தான் முதல் தவறு.. நாம் சீக்கிரம் போய்விட்டால் குடும்பத்திற்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதே இன்சூரன்ஸின் நோக்கம். குடும்பத்திற்குச் சிக்கல் வராமல் இருக்கும்.
25, 30 அதிகபட்சம் 40 வயதுக்குள் இந்த இன்சூரன்ஸ் எடுத்தால் அதற்கான ப்ரீமியம் குறைவாகவே இருக்கும். 80, 85 வயது வரை கூட இந்த இன்சூரன்ஸை எடுத்துக் கொள்ளலாம். 85 வயது வரை இன்சூரன்ஸ் எடுத்திருந்தால்.. 84 வயதில் உயிரிழந்தால் கூட குடும்பத்திற்கு அந்த பெருந்தொகை கிடைக்கும். இதற்கான ப்ரீமியத்தை கட்டவும் பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கிறது.

யாருக்குத் தேவை: சொத்து பெரியளவில் இல்லை என்றால் இன்சூரன்ஸ் நிச்சயம் தேவை. மாத சம்பளத்தை நம்பி இருப்போருக்கு டெர்ம் இன்சூரன்ஸ் கண்டிப்பாகத் தேவை. நாம் இல்லையென்றாலும் குறைந்தது குடும்பம் கவலைப்படாமல் இருக்கும். அதிகபட்சம் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை நாம் இன்சூரன்ஸ் எடுக்கலாம். எனவே டெர்ம் இன்சூரன்ஸ் தான் முக்கியம்
அனைவருக்கும் உடம்பில் ஒரு கட்டத்தில் நோய்ப் பாதிப்பு வரும். இப்போது நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும் பிற்காலத்தில் பிரச்சினை வரும். ஒரு சிலருக்கு மட்டுமே எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் காலமாவார்கள். ஆனால், பெரும்பாலானோருக்கு இடையிலேயே நோய்ப் பாதிப்பு வரும். ஒரு முறை மருத்துவமனைக்குச் சென்று திரும்பினாலே.. 5 முதல் 10 லட்சம் வரை செலவாகிவிடும். இதிலேயே பலருக்கும் ஒட்டுமொத்த சேமிப்பும் காலியாகிவிடும்.
சேமிப்பை விட முக்கியம்: எனவே, அனைவரும் 5 முதல் 10 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டை எடுத்து வைப்பது நல்லது. எங்கள் நிறுவனத்திலேயே இன்சூரன்ஸ் இருக்குனு சிலர் சொல்வார்கள். அது தவறு.. ஏனென்றால் காப்ரேட் இன்சூரன்ஸ் நாம் ஓய்வு பெற்ற பிறகு வராது. நம்ம ஊரில் 50 வயதைத் தாண்டினால் மருத்துவ காப்பீடு பெறுவது கடினம். எனவே, காப்ரேட் இன்சூரன்ஸ் இருந்தாலும் தனியாக ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.
சேமிப்பு எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு இன்சூரன்ஸ் எடுப்பதும் முக்கியம். உங்களுக்கு வலுவான குடும்ப பின்னணி இல்லையென்றால் என்றால் டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ இன்சூரன்ஸ் என இரண்டுமே முக்கியம். முதல்முறையாக முதலீடு செய்கிறார்கள் என்றால் டெர்ம் இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ இன்சூரன்ஸை முடித்த பிறகே முதலீடுகளைத் தொடங்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications