Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்மார்ட்போன் சந்தையில் ருத்ர தாண்டவம்.. ஈரான் போர் + AI சிப்.. 40% விலை உயர்வால் ஆடிப்போன மக்கள்..!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு கடந்த 10 வருடத்தில் வேகமாக வளர்ந்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது ஸ்மார்ட்போன். பெரு நகரங்கள் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது, வெறுமனே தொலைதொடர்பு சேவையை தாண்டி கல்வி, வேலை, வணிகம், கன்டென்ட் கிரியேஷன், பொழுதுபோக்கு போன்ற அனைத்திலும் அது முக்கிய கருவியாகி மாறிவிட்டது.

இதனால், ஸ்மார்ட்போன் சந்தை இந்தியாவில் வேகமாக வளரும் மின்னணு துறையாக உருவெடுத்தது. வேகமாக சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென பிரேக் அடித்தது போல் தற்போது ஸ்மார்ட்போன் சந்தையை புரட்டிப்போடும் விஷயம் நடந்துள்ளது.

Smartphone Iran War Smartphone Price Hike India 2026 Vivo Samsung Oppo Price Increase AI Chip Shortage Smartphones Iran War Impact on Mobiles Memory Chip Cost Surge India 40 AI 2026 smartphone prices up 40 India 2026 Vivo Samsung Oppo price hike AI chip shortage smartphone India Iran war impact smartphone market memory chip prices surge 120 Vivo T4 Lite price increase 40 Samsung Galaxy A56 A57 price hike Oppo A6x A6 Pro price rise Nvidia AI focus memory chip shortage India smartphone market stagnation 2026 smartphone bill of materials cost rise Realme Xiaomi Nothing price increase further smartphone price hikes coming All India Mobile Retailers Association warning Trump West Asia war smartphone effect 40 AI 120 T4 A56 A57 A6x A6 Pro Nvidia AI 2026

உலகளாவிய அரசியல் பதற்றம், தொழில்நுட்ப மாற்றங்கள், மற்றும் உற்பத்தி செலவு உயர்வு போன்ற காரணிகளால் ஸ்மார்ட்போன் சந்தையின் நிலை தலைகீழாக மாறியுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை தற்போது கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மத்திய கிழக்கில் நடத்தி வரும் போர் சூழ்நிலையும், அமெரிக்காவின் என்விடியா நிறுவனத்தின் AI சிப் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க கட்டயாப்படுத்துவது வாயிலாக, இந்திய ஸ்மார்ட்போன் விலைகளை 40% வரை உயர்த்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது.

டாப் 5 நிறுவனங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ, சாம்சங், ஓப்போ ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே கடந்த ஆண்டு விற்பனையான 152 மில்லியன் ஸ்மார்ட்போன்களில் சுமார் 47% பங்கைக் கொண்டிருந்தன. இதனுடன் ரியல்மி மற்றும் சியோமி ஆகியவை சேர்த்தால், இந்திய சந்தையின் கிட்டத்த 67 சதவீத பங்கையும் இந்த 5 நிறுவனங்கள் கொண்டுள்ளது.

இந்த முக்கிய நிறுவனங்களே விலை உயர்த்தியுள்ளதால், ஸ்மார்ட்போன் சந்தை முழுமையாக பாதித்துள்ளது.

முக்கிய மாடலின் விலை உயர்வு

விவோ நிறுவனம் தனது குறைந்த விலை போன்களிலேயே பெரிய அளவில் விலை உயர்த்தியுள்ளது. விவோ T4 Lite மாடல் ரூ.9,999 இலிருந்து ரூ.13,999 ஆக உயர்ந்துள்ளது - இது 40% உயர்வு ஆகும்.

சாம்சங் நிறுவனமும் தனது நடுத்தர பிரிவு போன்களில் விலை உயர்த்தியுள்ளது. Galaxy A56 மாடல் ரூ.47,999 இலிருந்து 30 சகவீதம் அதிகரித்து ரூ.62,499 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் A36 மாடல் ரூ.38,999 இலிருந்து 36 சதவீதம் உயர்த்தி ரூ.52,999 ஆக உயர்ந்துள்ளது.

ஓப்போ நிறுவனம் ரூ.2,000 வரை நிலையான உயர்வை பல மாடல்களில் செய்துள்ளது. ரூ.10,999 முதல் ரூ.27,999 வரை உள்ள மாடல்களில் 18% வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஏன் இந்த விலை உயர்வு?

இந்த விலை உயர்வுக்கு 2 முக்கிய காரணம் உள்ளது.
முதலாவது, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை, உலகளாவிய விநியோகச் சங்கிலியை பாதித்துள்ளது.
இரண்டாவது, AI தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அதிக அளவில் ஏஐ துறைக்கான சிப் உற்பத்தி தயாரிக்கப்படுவதால், ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான மெமபி சிப் உற்பத்தி குறைந்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த மெமரி சிப் விலைகள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை 120% க்கும் மேல் உயர்ந்துள்ளன. இதன் விளைவாக, ஒரு ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மெமரி சிப் செலவு முன்பு 18% இருந்தது தற்போது 40% வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு தான் தற்போது ஸ்மார்ட்போன் விலை உயர்வாக மாறியுள்ளது.

மேலும் ஈரான் போர் காரணமாக தைவான் நாட்டில் எல்பிஜி பற்றாக்குறை ஏற்பட்டு வரும் வேளையில் சிப் தயாரிப்பு கூடுதலாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

நுகர்வோர் மத்தியில் மாற்றம்

இதற்கு ஏற்றார் போல் 2021 கொரோனா காலத்திற்குப் பிறகு இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மீண்டும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஸ்மார்ட்போன்களில் புதிய அம்சங்கள் குறைவாக இருப்பதும், விலை அதிகரிப்பும் மக்கள் புதிய போன்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இதற்கிடையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, குடும்ப செலவுகளை அதிகரித்துள்ளது. இதனால், ஸ்மார்ட்போன் வாங்குவது போன்ற செலவுகளை மக்களை ஒத்திவைத்துள்ளனர்.

மீண்டும் விலை உயர்வு

இந்த விலை உயர்வு இதோடு நிற்காது, இனி வரும் காலத்திலும் தொடரும் என்று சந்தை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. அகில இந்திய மொபைல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கைலாஷ் லக்யானி கூறுகையில், தற்போதைய விலை உயர்வுகள் நிரந்தரமானவை அல்ல, அடுத்த சில மாதங்களில் மீண்டும் விலை உயர வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

இப்படி இந்தியாவின் 43 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் சந்தை தற்போது பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+