717 டாஸ்மாக் கடைகளை மூடிய விஜய்-க்கு அடுத்த முக்கிய TASK.. சென்னை ஐடி துறைக்கு 'இது' முக்கியம்?
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு பெற்றிருந்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நைட் லைப் மற்றும் சமூக வாழ்க்கை தரத்தில் பெரிய மாற்றம் தேவை என பல வருடங்களாக தமிழ்நாட்டில் கருத்து நிலவி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கவும், வெளிநாட்டு நிறுவன ஊழியர்களுக்கான மேம்பட்ட சமுக வாழ்க்கை முறையை கொண்டு வர வேண்டும் என்ற கருத்து திமுக ஆட்சி காலத்தில் இருந்தே நிலவி வருகிறது.

இந்த நிலையில் விஜய் தலைமையிலான அரசுக்கு கிட்டத்தட்ட இதே கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழ்நாடு ஐடி துறையிலும், கார்ப்பரேட் துறை முதலீட்டை ஈர்ப்பதில் முன்னேற விரும்பினால், தற்போதுள்ள மதுபான கொள்கையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.
பெங்களூரு, ஹைதராபாத், புனே போன்ற நகரங்கள் உலகளாவிய திறன் மையங்களை (GCC) ஈர்த்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு நகரங்களும் இதே வேகத்தில் முன்னேற வேண்டுமென்றால், சமூக வாழ்க்கைக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இதில் முக்கியப் பங்கு வகிப்பது மதுபான கொள்கைதான்.
சென்னை போன்ற பெருநகரங்களில் தரமான பப்கள், பாதுகாப்பான நைட் லைஃப், சிறந்த உணவகங்கள் மற்றும் சர்வதேச தரத்தில் சமூக கலாச்சார சூழல் உதாரணமாக நியூயார்க் நைட் லைப் போல சென்னை, கோயம்புத்தூரில் உருவாக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. இது வெறும் மதுபான கிடைப்பை மட்டும் அடிப்படையில்லை, திறமையான இளைஞர்களுக்கு பணி மற்றும் வாழ்க்கை சமநிலையுடன் வாழக்கூடிய நகர சூழலை உருவாக்குவது முக்கியம் என்பதையே வலியுறுத்துகிறது.
சமூக வாழ்க்கைக்கும் ஐடி முதலீட்டுக்கும் தொடர்பு
நல்ல பப், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவை இன்றைய இளம் ஐடி பணியாளர்களுக்கு மிக முக்கியம். வேலை முடிந்த பிறகு நண்பர்களுடன் அமைதியான, பாதுகாப்பான இடங்களில் நேரத்தை செலவிட விரும்புகின்றனர்.
தற்போதைய தமிழ்நாட்டு கொள்கை இத்தகைய சூழலை உருவாக்குவதில் பின்தங்கியுள்ளது. கர்நாடகா போன்ற மாநிலங்கள் மதுவிற்பனை மற்றும் உரிமம் வழங்கல் கொள்கையை தளர்த்தியதால், பெங்களூரு இன்று உலகளாவிய ஐடி நிறுவனங்களின் விருப்ப நகரமாக மாறியுள்ளது.
ஐடி நிறுவனங்கள் ஏன் இந்தக் கொள்கையை எதிர்பார்க்கின்றன?
ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு நல்ல சமூக வாழ்க்கையை வழங்க விரும்புகின்றன. வாடிக்கையாளர்களை வரவேற்கவும், டீம் உறுப்பினர்களிடையே நல்லுறவை வளர்க்கவும், நவீன உணவகங்கள், பார், லவுஞ்ச் ஆகியவை தேவை. தளர்வான மதுவிலக்கு கொள்கை இருந்தால் மட்டுமே இத்தகைய சூழல் உருவாகும். இது திறமையான இளைஞர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும் உதவும்.
பொருளாதார ரீதியான பலன்கள்
ஒரு திறன்மிக்க மதுபான கொள்கை இருந்தால் உணவகங்கள், பொழுதுபோக்கு துறை, ரியல் எஸ்டேட் ஆகியவை வளரும். இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும். கர்நாடகாவின் Alcohol-in-Beverage (AIB) மாதிரி கொள்கை இத்தகைய பலன்களை ஏற்கெனவே கொடுத்து வருகிறது. தமிழ்நாடும் இதைப் பின்பற்றினால், சென்னை பெங்களூருக்கு இணையான ஐடி மையமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இத்தகைய மதுபான கொள்கை மூலம் மக்களை அதிகமாக மதுபானத்தை அருந்த தூண்டுவதாக பொருள்படுத்தக்கூடாது. கடுமையான பணி சூழலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ரிலாக்ஸ் செய்வதற்கான வழி. எப்படி பார்க், பீச் உள்ளதோ அதேபோல தான்.
இதேபோல் இத்தகைய மதுபான கொள்கை தளர்வு மூலம், மலிவு விலை மதுபானத்தை ஊக்குவிக்காமல் பீரிமியம் மதுபானத்தை பிரதானமாக கொண்டு வருவதும் முக்கியம்.
ஊழியர்களின் பார்வை
இன்றைய இளம் ஐடி ஊழியர்கள் குடிப்பழக்கத்தை விரும்புவதில்லை, குறிப்பாக ஜென்Z தலைமுறையினர் மத்தியில் குடிப்பழக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது. அவர்கள் தரமான, பாதுகாப்பான, பல்வேறு விருப்பங்களை கொண்ட சமூக இடங்களை எதிர்பார்க்கின்றனர். இது அவர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தும். தமிழ்நாடு இத்தகைய சூழலை உருவாக்கினால், திறமையான இளைஞர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
தமிழ்நாடு ஐடி துறையில் முன்னேற விரும்பினால், மதுவிலக்கு கொள்கையை நவீனமயமாக்க வேண்டும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாதிரியைப் பின்பற்றி, சென்னையை பெங்களூருக்கு இணையான ஐடி மையமாக மாற்ற முடியும். இது இளைஞர்களின் எதிர்காலத்துக்கும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கியமான படியாக அமையும்.














Click it and Unblock the Notifications