மரவள்ளிக்கிழங்கு வரத்து அதிகரிப்பால் விலை குறைவு – விவசாயிகள் கவலை
கரூர்: கரூர் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம், வேட்டமங்கலம், குந்தானிபாளையம், கவுண்டன்புதூர், ஒலப்பாளையம், நெய்யால், முத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர்.

ஜவ்வரிசி விலை உயரும் போது மரவள்ளி கிழங்குக்கு விலையை உயர்த்தியும், வீழ்ச்சி அடையும் போது மரவள்ளி கிழங்குக்கு விலை குறைத்தும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஜவ்வரிசி விலை சேகோசர்வ் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களாக மரவள்ளிக்கிழங்கு ஒரு டன் ரூபாய் 10 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த வாரம் ஒருடன் 4ஆயிரத்துக்கு 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சிப்ஸ் தயாரிக்க கூடிய கிழங்குகள் ரூபாய் 5 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது. ஜவ்வரிசி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதினாலும், கிழங்கின் வரத்து அதிகரித்து உள்ளதாலும் மரவள்ளிக் கிழங்கின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் மரவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரும் கவலை அடைந்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications