இழுத்து மூடப்பட்ட TCS நாசிக் அலுவலகம்.. முன்னாள் அதிகாரி தலையீடு.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நாசிக் பிபிஓ அலுவலகத்தில் செயல்பாடுகள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் மொத்தமாக அலுவலகத்தை மூட வேண்டும் என்ற முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் மற்றும் மத மாற்றம் தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், போலீஸ் நடவடிக்கைகள் அலுவலகத்தை முடக்கியுள்ளன. இந்த சம்பவம் இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் பணியிட பாதுகாப்பு குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
கடந்த வாரம் முதல் சரிவர இயங்காத இந்த அலுவலகத்தின் முன் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் தற்போது முழுமையாக செயல்பாடுகளை முடக்கியுள்ளது என பர்ஸ்ட்போஸ்ட் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அலுவலகத்தில் இருந்து பணியாற்றும் அனைவருக்கும் வொர்க் ப்ரம் ஹோம் அல்லது மாற்று அலுவலக இட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ் விசாரணையை தொடர்ந்து நாசிக் பிபிஓ அலுலகத்தில் தற்போது இயக்கம் முடக்கப்பட்டதோடு, இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துள்ளது போலீஸ். மேலும் அலுவலகத்திற்குள் யாரெல்லாம் செல்கிறார்கள் மற்றும் எப்போது வெளியே வருகிறார்கள் என்பதை தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. புகார்களின் தீவிரம் காரணமாக போலீஸார் விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த விசாரணையில் இதுவரை ஒன்பது பேர் மீது புகார்கள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்கள் தனித்தனியாக நடந்தது கிடையாது, திட்டமிட்டு நடந்திருக்கலாம் என்று போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனால் ஐடி துறையினர் மத்தியில் இது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் நிதா கான் என்ற எச்ஆர் அதிகாரி மீது மத மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ளது மேலும் இவர் தான் மாஸ்டர்மைன்ட் ஆக இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. மேலும் இந்த அலுவலத்தில் பணியாற்றிய முன்னாள் எச்ஆர் தலைவர் அஷ்வினி சைனானி பாதிக்கப்பட்டவர்களை புகார் அளிக்க வேண்டாம் என்று தடுத்ததாகவும், குற்றவாளிகளுக்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக உள்ளது.
பெரும்பாலான புகார்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரிகள் மீது பெண் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஹெச்ஆர் பிரிவில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையிலும், பெண் ஊழியர்களுக்கு இஸ்லாம் மத பழக்கங்களை கற்றுக்கொடுக்க உதவியது போன்ற காரணத்தால் நிதா கான் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.
டிசிஎஸ் நிறுவனத்தின் உள் நிர்வாக அமைப்புகள் ஊழியர்களை பாதுகாக்கத் தவறியதா என்பதை கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை 9 எஃப்ஐஆர்கள் பதிவாகியுள்ளன. 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் முன்வர வேண்டும் என்று போலீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
டிசிஎஸ் நாசிக் விவகாரம் இப்போது உள்ளூர் எல்லையை தாண்டி தேசிய அளவுக்கு விரிவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் டிசிஎஸ் ஊழியர்கள் மட்டும் தான் ஈடுபட்டு உள்ளனரா அல்லது வெளியாட்களின் தொடர்பும் உள்ளதா என்ற கேள்வியும் போலீசாருக்கு வந்துள்ளது. மேலும் உயர் அதிகாரிகளுக்கு வெளியில் இருந்து நிதி உதவி மற்றும் சர்வதேச இணைப்புகள் உள்ளதா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதோடு இந்த வழக்கில் ATS மற்றும் NIA ஆகிய தேசிய அமைப்புகள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேசிய மகளிர் ஆணையம் (NCW) தனியாக ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்துள்ளது. பணியிட பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பதை இந்த குழு சோதித்து வருகிறது.
பெரிய கேள்வி
டிசிஎஸ் விவகாரம் பெரிய ஐடி நிறுவனங்களில், ஊழியர்கள் அளிக்கும் புகார்களை எவ்வளவு சீரியஸ் ஆக எடுத்து தீர்வு காண்கிறது என்பதில் பெரும் விவாதம் உருவாகியுள்ளது. மூத்த அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் வந்துள்ள நிலையில், அவற்றை திட்டமிட்டு புறக்கணித்து என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஹெச்ஆர் பிரிவில் மற்ற ஊழியர்கள், உயர்மட்ட அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதேபோல் இந்த சம்பவம் பெரு நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. பணியிடத்தில் பாதுகாப்பும் நம்பிக்கையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை இது மீண்டும் நினைவூட்டுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications