தங்கமயில், கல்யாண், டைட்டன்: தங்க நகை கடைகளை புலம்பவிட்ட மோடி.. ஒரே அறிவிப்பு மொத்தமும் காலி!
திங்கட்கிழமை பங்குச் சந்தையில் நகைத் தொழில் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெரும் அதிர்வுகளை சந்தித்தன. இதற்கு முழு முக்கிய காரணம் மோடின் வீக்எண்ட் பேச்சு தான்.
ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரத்தையும், டாலர் இருப்பையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் மக்கள் தங்க நகைகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல் காரணமாக டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ், தங்கமயில் ஜுவல்லரி, சென்கோ கோல்டு, ஸ்கை கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் உள்ளிட்ட முக்கிய நகை நிறுவனங்களின் பங்கு விலைகள் 9 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
வெளிநாட்டு நாணய இருப்பை சேமிக்க வேண்டிய அவசியம் காரணமாக மோடி அறிவித்த சேமிப்பு நடவடிக்கை, நகை சந்தையின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், குறிப்பாக திருமணங்கள் போன்ற விழாக்களுக்காக தங்கம் வாங்கும் வழக்கத்தை ஒரு ஆண்டு காலம் தவிர்க்க வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள், சந்தையில் இந்த சரிவை ஏற்படுத்திய முக்கிய காரணமாகும்.
பங்குச் சந்தை வர்த்தகத்தின் தொடக்கத்தில் இருந்தே இன்று நகைத் துறை நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் இறங்கின.
டைட்டன் கம்பெனி-யின் பங்கு விலை அதிகபட்சமாக 6.4 சதவீதம் வரை குறைந்தது. அதேபோல், கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குகள் 8.3 சதவீதம் வீழ்ச்சியைப் பதிவு செய்தன. ஸ்கை கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு 12.2 சதவீதம் வரை சரிந்தது. சென்கோ கோல்டு பங்குகள் 10.7 சதவீதம், பின் காட்கில் ஜூவல்லர்ஸ் 7 சதவீதம், பிசி ஜூவல்லர் 5 சதவீதம் மற்றும் திரிபோவந்தாஸ் பிம்ஜி ஜவேரி பங்குகள் 6.3 சதவீதம் வரை இறங்கின, தமிழ்நாட்டின் தங்கமயில் ஜூவல்லரி 6 சதவீதம் வரையில் சரிந்தது.
பிரதமர் மோடி சொன்னது என்ன?
ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க வெளிநாட்டு நாணயத்தை சேமிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக வலியுறுத்தினார்.
மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள இந்த சூழலில், தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு காலத்துக்கு தள்ளிப்போடுமாறு அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். குறிப்பாக திருமணங்கள் மற்றும் பிற விழாக்களுக்காக தங்கம் வாங்கும் பழக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அவர் கோரினார். இந்த அறிவுறுத்தல் நாட்டின் வெளிநாட்டு செலவுகளைக் குறைக்க உதவும் என்று அவர் நம்புகிறார்.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி மூலம் நாட்டின் பணப் பரிவர்த்தனை மற்றும் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாத அவர் சுட்டிக்காட்டினார். இந்த நடவடிக்கை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து பாதுகாக்க முடியும் என்று அவர் விளக்கினார்.
பிரதமரின் இந்த உரைக்குப் பிறகு திங்கட்கிழமை சந்தை திறக்கும்போதே நகை நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.















Click it and Unblock the Notifications