ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!
மத்திய கிழக்கில் பகுதியில் அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், அமெரிக்க டிரோன் ஸ்டார்ட்அப் நிறுவனமான Powerus தனது பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வளைகுடா நாடுகளுக்கு நேரம் பார்த்து விற்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. உலகில் எங்கு போர் நடந்தாலும், அது ஆயுத உற்பத்தி நிறுவனங்களும், பாதுக்காப்பு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.
அப்படி Powerus என்ற அமெரிக்க நிறுவனம், ஈரான் நாட்டின் டிரோன் தாக்குதலை கண்டு ஆடிப்போயிருக்கும் வளைகுடா நாடுகளுக்கு தனது டிரோன் தொழில்நுட்பத்தை விற்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதில் விஷயம் என்னவென்றால் Powerus நிறுவனத்திற்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பது தான்.

யாரு சாமி நீங்க
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் மகன்களான எரிக் டிரம்ப் மற்றும் டொனால்டு டிரம்ப் ஜூனியர் ஆகியோரின் ஆதரவுடன் Powerus நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின், வளைகுடா பகுதியில் பாதுகாப்புக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. இதனால் டிரோன் மற்றும் ஏர் டிஃபென்ஸ் தொழில்நுட்பங்களுக்கு பெரிய அளவில் தேவை உருவாகியுள்ளது. இதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு பணத்தை அள்ள டிரம்ப் வாரிசுகள் முடிவு செய்துள்ளனர்.
டிரோன் டெமோ
Powerus நிறுவனம் தற்போது தனது டிரோன் தடுப்பு தொழில்நுட்பங்களை பல மத்திய கிழக்கு நாடுகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. Powerus நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரெட் வெலிகோவிச், இந்த தொழில்நுட்பம் மனித உயிர்களை காப்பாற்றும் திறன் கொண்டது என தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிட்டபடி, பல நாடுகளில் நேரடி டெமோ நடைபெற்று வருகின்றன. இருப்பினும், எந்த நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை பரிசீலித்து வருகின்றன என்பது வெளியிடப்படையாக தெரிவிக்கவில்லை.
சர்ச்சையை கிளப்பும் டிரம்ப் குடும்பம்
இந்த வர்த்தகத்தில் டிரம்ப் குடும்பத்தின் ஈடுபாடு, அமெரிக்க அரசு நெறிமுறை மீறுவதாக கேள்விகள் அமெரிக்காவில் எழுந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தில் பணியாற்றிய Richard Painter என்பவர் Powerus நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் ஒப்பந்தம் அரசியல் மற்றும் வணிக நலன்களை பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.
இந்த ஈரான் போரில் வளைகுடா நாடுகள், அமெரிக்க அரசியல் ஆதரவைப் பெறுவதற்காக டிரம்ப் குடும்பத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிடமிருந்து வாங்க வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என்று ரிச்சர்ட் பெயின்டர் தெரிவித்துள்ளார். இது போர் சூழ்நிலையை லாபமாக மாற்றும் அபாயத்தை உருவாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

டிரம்ப் மகன்கள்
Powerus நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அதே நேரத்தில், டிரம்ப் மகன்கள் இந்த நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தங்கள் மூலம் இந்நிறுவனத்தில் அதிகப்படியான பங்குகளைப் பெறும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்ப் குடும்பம் பிஸ்னஸ்
டிரம்ப் குடும்பம் காலம் காலமாக ரியல் எஸ்டேட் துறை, பொழுதுபோக்கு துறையை தாண்டி முதலீடு செய்தது கிடையாது. ஆனால் டிரம்ப் தனது 2வது ஆட்சியில் கிரிப்டோகரன்சி, prediction markets, சோஷியல் மீடியா, பாதுகாப்பு உற்பத்தி துறைகளில் விரிவடைந்துள்ளனர்.
நிதியுதவி
இவை அனைத்தையும் தாண்டி Powerus நிறுவனம் அமெரிக்க பாதுகாப்பு துறை (Pentagon) அமெரிக்காவில் தனது டிரோன் உற்பத்தியை அதிகரிக்க சுமார் 1.1 பில்லியன் டாலர் அளவிலான நிதி ஒதுக்கியுள்ளது. குறிப்பாக சீன இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், உள்நாட்டு டிரோன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. இதை Powerus நிறுவனம் சரியான நேரத்தில் பயன்படுத்திகொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications