ரெகுலராக பணம் வேண்டுமா? அப்போ நீங்க செய்ய வேண்டியது இதுதான்! ஆனந்த் சீனிவாசன் தரும் சூப்பர் ஐடியா
சென்னை: முதலீடு என வரும் போது மிடில் கிளாஸ் மக்கள் எப்போதும் ரொம்பவே குழம்பிப் போவார்கள். சிறுக சிறு சம்பாதித்துச் சேர்த்த பணம் சரியாக இருக்க வேண்டும் என்பதால் எதில் முதலீடு செய்யலாம் என்பதில் குழப்பம் இருக்கும். அதுபோன்ற நேரங்களில் நாம் பார்க்கும் விளம்பரங்கள் முதலீடு சார்ந்து முடிவெடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அப்படி இப்போது டிரெண்டாகும் ஒரு விஷயம் குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் எங்குப் பார்த்தாலும் சிப் முதலீடு குறித்து விளம்பரங்களைப் பார்த்து இருப்போம். மாதாமாதம் சிப் முறையில் முதலீடு செய்யுங்கள்.. சிப் முறையில் முதலீடு செய்தால் கஷ்டம் இல்லாமலேயே பெரிய தொகை சேர்க்கலாம் என நாம் ஏகப்பட்ட விளம்பரங்களைப் பார்த்திருப்போம். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களே இந்த விளம்பரங்களை அதிகம் வெளியிட்டன.

சிப் முதலீடு
சிப் என்பது எதில் முதலீடு செய்யலாம் என்பதில்லை.. அது ஒரு முதலீடு செய்யும் முறை. அதாவது மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதே சிப்பின் அடிப்படை. இதுபோல எல்லா மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் சிரமமில்லாமல் பெரிய தொகை சேர்க்கலாம் எனச் சொல்லி வந்தார்கள். ஆனால், கடந்த சில காலமாக விளம்பரங்களில் சிப்பை காட்டிலும் SWP பற்றியே அதிகம் வரும்.
இது புதுசா இருக்கே
SWP என்றால் Systematic Withdrawal Plan. சிப் என்றால் எப்படி மாதாமாதம் ஒரு தொகையை முதலீடு செய்வது என்று பொருளோ.. அதேபோல SWP என்றால் மாதாமாதம் நமது முதலீட்டில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுக்க வேண்டும் என்பது பொருளாகும். இது குறித்தே இப்போது அதிகம் விளம்பரங்கள் வருகிறது. இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது குறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது ஆனந்த் சீனிவாசன் டென்ஷன் ஆகிவிட்டார்.
டென்ஷன் ஆன ஆனந்த் சீனிவாசன்
இது குறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில், "SWPல் போட்ட பணம் அப்படி இருக்கும் என்பதெல்லாம் பொய். பங்குச்சந்தை என்ன எப்போதும் அதிகரித்து கொண்டா இருக்கும். கடந்த ஓராண்டாகப் பங்குச்சந்தையில் பெரிய லாபம் இல்லை. 4 முக்கிய பெரு நிறுவனங்களில் போட்டிருந்தால் கடந்த 3 ஆண்டுகளில் கூட இரண்டு சதவிகிதத்திற்கு மேல் பணம் வந்திருக்காது. போட்ட முதலீட்டில் இருந்தே பணம் எடுத்து கொடுக்கலாம் அவ்வளவு தான்.
ரெகுலராக பணம் வேண்டுமா!
SWP எல்லாம் சரி இல்லை. உங்களுக்கு ரெகுலராக பணம் தேவைப்படும் என்றால்.. அப்போது பங்குச்சந்தை என்பது அதற்கான இடம் இல்லை. ரெகுலராக பணம் தேவை என்றால் கடன் பத்திரம் தான் சரி.. நீங்களே தேடி ஒரு நல்ல கடன் பத்திரத்தை வாங்கலாம். அதில் இருந்து மாதம் மாதம் வட்டி வரும் அதை எடுத்து செலவு செய்யலாம். நமது முதலீடு அப்படியே பாதுகாப்பாக இருக்கும். வட்டி தனியாக வரும். இப்படி இருக்கும்போது எது முதலீடு எது வட்டி என்பதில் ஒரு தெளிவு இருக்கும்.
SWP பிளானில் நமக்கே தெரியாமல் நாம் முதலீட்டைச் செலவழிக்க ஆரம்பித்துவிடுவோம். இதுதான் முதலீடு, இதுதான் வட்டி என்பதில் தெளிவு இருக்காது. ஒவ்வொரு மாதமும் பங்குச்சந்தை உயரும் என உறுதியாகச் சொல்லவே முடியாது. 26,500 புள்ளிகளை இல் இருந்து பங்குச்சந்தை கடந்த ஓராண்டாக எங்கும் போகவில்லை. அப்படியே தான் இருக்கிறது. எனவே, பங்குச்சந்தை எப்போதும் ஏறிக் கொண்டே இருக்க முடியும் என நினைக்க முடியாது. மார்கெட் அதே இடத்தில் இருக்கும் போது நாம் மாதம் 2 சதவிகிதம் எடுத்தாலும் 10 மாதங்களில் போட்ட பணத்தில் 20% காலியாகிவிடும்" என்றார்.
என்ன காரணம்
இப்போது சிப்பை விட இதை ஏன் அதிகம் விளம்பரப்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு அவர், "ஏனென்றால் கடந்த ஓராண்டாகவே பங்குச்சந்தையில் லாபமே இல்லை. அதற்கு முன்பு இரண்டு ஆண்டுகள் கூட பெரியளவில் லாபம் இல்லை. எனவே, லாபம் இல்லை என மக்கள் பணத்தை எடுக்கும்போது ஒரேயடியாகப் பணத்தை எடுக்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாகப் பணத்தை எடுங்கள் எனச் சொல்வதே இந்த SWP. இதெல்லாம் மியூச்சுவல் பண்ட் டிஸ்டிபியூட்டர் போடும் பிளான் தான்" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications