சென்னையில் ஒரு விலை.. மும்பையில் ஒரு ரேட்.. தங்கம் விலை நகரத்திற்கு நகரம் மாறுபடுவது ஏன் தெரியுமா?
சென்னை: தங்கம் விலையானது நம் தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக நாடு முழுவதிலுமே நகரங்களுக்கு நகரம் வேறுபட்ட விலையில் விற்பனை ஆகின்றன என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் ஏன் இப்படி தங்கம் விலை மும்பையில் ஒரு ரேட்டுக்கும், சென்னையில் ஒரு ரேட்டுக்கு விற்பனையாகிறது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது முதலீடாக மட்டும் இன்றி மக்களின் அந்தஸ்தில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஆண்கள், பெண்கள் பாகுபடு இல்லாமல் அனைவருக்கும் தங்கத்தில் அணிகலன் அணிவதை பெரிதும் விரும்புகிறார்கள்.

ஏன் தங்கம் விலை மாறுபடுகிறது?
இதனால், இந்தியாவில் தங்கம் விலையை என்பது சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்துவதை பார்க்க முடிகிறது. தங்கம் விலையைப் பொறுத்தவரை நகரங்களுக்கு நகரம் விலை மாறுபாடுவதை பார்க்க முடிகிறது. நாடு முழுக்க ஒரே மாதிரியான விலையில், தங்கம் விற்பனையாவது இல்லை.
சென்னையில் ஒரு விலையும் பெங்களூரில் ஒரு விலையும் உள்ளது. அதாவது சென்னையை விட கேரளாவில் தங்கம் விலை கொஞ்சம் குறைவாக வாங்கலாம். ஒரே நாடுதான் என்றாலும் ஏன் இப்படி தங்கம் விலை வேறுபடுகிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? ஏன் தங்கம் விலை ஒவ்வொரு நகரங்களிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இறக்குமதி வரி அதிகம்
தங்கத்தின் விலை என்பது சர்வதேச அளவில் நிகழும் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. தற்போது சர்வதேச அளவில் நிகழும் போர் பதற்றம், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவையால் தங்க விலையானது கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
உலக அளவில் அதிக தங்கம் இறக்குமதி செய்யக்கூடிய நாடாக இந்தியா உள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்யும் போது அதற்கான இறக்குமதி வரியை செலுத்த வேண்டியது அவசியம். அதேபோல, நகையாக வாங்கும் போது ஜி.எஸ்.டி. மற்றும் செய்கூலி, சேதாரம் உள்ளிட்டவற்றையும் நாம் செலுத்துகிறோம். பல்வேறு நகரங்களிலும் தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலங்களில் விதிக்கப்படக்கூடிய வரி அடிப்படையில் வேறுபடுகிறது.
போக்குவரத்து செலவுகள்
இது தவிர உள்ளூர் வரி விதிப்புகள் தங்கத்தின் விலையில் மாற்றத்தை கொண்டு வருகின்றன. தங்கத்தை மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் துறைமுகங்கள் வாயிலாகத்தான் இந்தியாவில் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. இங்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் பிறகு அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதற்கான போக்குவரத்து செலவுகள் ஆகியவையும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, சென்னையில் இறக்குமதி செய்யப்படக்கூடிய தங்கத்தை சென்னைக்குள்ளேயே கொண்டு செல்வதற்கு ஆகும் செலவும், சென்னையிலிருந்து வட மாநிலத்திற்கு கொண்டு செல்வதற்கான செலவும் பெருமளவில் மாறுபடும். நகரத்திற்கு நகரம் தங்கத்தின் விலை மாறுவதற்கு இது ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.
கலாச்சார ரீதியாக தொடர்பு
நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் தங்கத்திற்கான தேவை மாறுபடுகிறது. சில மாநிலங்களில் கலாசார ரீதியாக அதிக தொடர்பு இருப்பதால் தங்கத்திற்கான 'தேவை' அங்கே அதிகமாக உள்ளது. இதனால் தங்கத்திற்கான போட்டி அதிகரிக்கும். இதனால், தங்கத்தின் விலை சற்று உயரலாம்.
அதேபோல, போட்டியை கருத்தில் கொண்டு நகை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் தங்கத்தை, எனவே அந்த ஊரில் இருக்கக்கூடிய தேவையைப் பொறுத்து தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் உள்ளது.
ஹால்மார்க் மையங்கள்
இந்தியாவில் தங்க நகையின் தூய்மை தன்மையை உறுதிப்படுத்த ஹால்மார்க் முத்திரை பெறுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனை பிஐஎஸ் எனப்படும் அமைப்பு கண்காணித்து வருகிறது. ஆனால் அனைத்து நகரங்களிலும் இந்த ஹால்மார்க் மையங்கள் கிடையாது. எனவே நகைக்கடை நிறுவனங்கள் ஹால்மார்க் மையங்கள் இருக்கக்கூடிய பகுதிகளுக்கு தங்கத்தை அனுப்பி வைக்கின்றன.
அங்கு சான்றிதழ் பெற்று தங்கள் நிறுவனத்தின் கிளைகள் இருக்கக் கூடிய இடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றன. இந்த போக்குவரத்து செலவையும் சேர்ப்பதால் தான் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. நாட்டிலேயே தங்கம் விலை குறைவாக உள்ள இடமாக கேரள மாநிலம் திருச்சூர் உள்ளது.
-
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications