ஏஐ, போர், ரெசிஷன்-க்கு மத்தியில் சிக்கிக்கொண்டு தவிக்கும் இளைஞர்கள்.. வரலாறு சொல்லும் முக்கிய பாடம்!

Subscribe to Oneindia Tamil

இன்றைய தலைமுறை மிகப்பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார்களா..? என்ற கேள்வி தற்போது அதிகளவில் எழுந்து வருகிறது. ஒருப்பக்கம் ஏஐ தொழில்நுட்ப முன்னேற்றத்தால் செய்யும் வேலையில் நிரந்தரமற்ற நிலை உருவாகியுள்ளது, மறுப்புறம் முதலீடு செய்த பணம் வளர்ச்சி அடைகிறதா என்றால் இல்லை போர், ரெசிஷன் அச்சம், வட்டி விகித உயர்வு போன்றவை கைகொடுக்கவில்லை. இதனால் இளைஞர்களின் வாழ்க்கை இக்கட்டான நிலையில் உள்ளதாக கருத்து நிலவுகிறது.

இதேபோன்ற நிலையை, நம்முடைய முந்தைய தலைமுறையினர் எப்படி கையாண்டனர்..? எப்படி தற்போது பலர் ஏஐ பற்றிய கவலை இல்லாமலும், போர், ரெசிஷன் அச்சம் இல்லாமலும் நம்மதியாக இருக்கின்றனர். இந்த கேள்விக்கான விடை தான் நாளை நமக்கான பதிலாக இருக்கும்.

IT Real estate AI Job investment Career Lesson for Gen Z Build Assets Not Just Salary IT Career 25 Years Ago Financial Freedom Through Assets AI Recession Survival Strategy 25 lesson from it professionals 25 years ago build assets when salary is high financial security in ai recession why old it employees are safe in 2026 cash flow from assets importance real estate and stocks for peace of mind gen z career advice 2026 dont waste salary build assets mental peace through investments boring investments that worked real estate as lifetime subscription to peace career hack is owning assets inflation and real estate impact convert salary into cash flowing assets long term financial freedom lesson 25

இந்திய ஐடி துறையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது பயணத்தை தொடங்கிய ஒருவரின் வாழ்க்கை இன்று எப்படி இருக்கிறது..? (இன்றயை ஏஐ துறை வளர்ச்சியும், 25 ஆண்டுகளுக்கு முன்பு ஐடி துறை வளர்ச்சியும் கிட்டத்தட்ட சம்மானது). பெரும்பாலானவர்கள் இன்று ஒரு நல்ல மதிப்புடைய, போதுமான இட வசதி கொண்ட வீட்டின் உரிமையாளராக உள்ளனர். அதோடு கூடுதலாக ஒரு சொத்து மூலம் மாதம் மாதம் வாடகை வருமானம் பெறுகிறார்கள். பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்கள் மூலம் சில டிவிடெண்ட் வருமானமும் கிடைக்கிறது.

இதனால் 2026ல் வேலை இழந்தாலும் கூட, அவர்களின் வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்படாது. இதற்கான காரணம் ஒன்று தான், நம்முடைய முந்தைய தலைமுறையினர் நிலையான சம்பளம் வந்த காலத்திலேயே சொத்துகள் (Assets) உருவாக்க முடிவு செய்தனர். அந்த முடிவு இன்று அவருக்கு நிலையான வருமானத்தையும், மனஅமைதியையும் வழங்குகிறது.

இதுதான் முக்கியமான பாயின்ட்

ஒருவரின் வாழ்க்கையை பாதுகாப்பாக மாற்றுவது சம்பளம் அல்ல, Cash Flow. அதாவது ஒரு மாதத்திற்கு தேவையான செலவுகளை ஈடுக்கட்டும் வகையில் சம்பளம் அல்லாத வருமானம் கிடைக்கிறதா என்பது தான் அமைதியான வாழ்க்கைக்கு முக்கியமான பாயின்ட். வீடு, வாடகை வருமானம் தரும் சொத்துகள், பங்குகள், முதலீடுகள் இவை எல்லாம் சேர்ந்து ஒருவர் வேலை இல்லாமலிருந்தாலும் வாழ்க்கையை தொடரும் வகையிலான வருமானத்தை அளிக்க உதவுகின்றன.

இத்தகைய வருமானம் உருவாகும் போது, வேலை என்பது கட்டாயமாக இல்லாமல், ஒரு சாய்ஸாக மாறுகிறது. அதுவே வாழ்க்கையில் உண்மையான சுதந்திம் என்பதை இத்தகைய ஏஐ, போர், ரெசிஷன் காலக்கட்டத்தில் காட்டுகிறது.

பங்கு முதலீடுகள் அதிகமாக லாபம் கொடுக்கும் போது ஒட்டுமொத்த மக்களும் பங்குகளை நோக்கி ஓடினர், இதன் பின் தங்கம், வெள்ளி, கடைசியாக காப்பர் வரையில் மக்கள் கண்களை மூடிக்கொண்டு ஓடினர். ஆனால் அனைத்து காலக்கட்டத்திலும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் பங்குச்சந்தை போல் பெரிய அளவிலான லாபத்தை அளிக்காவிட்டாலும் தொடர்ந்து லாபத்தை அளித்து வருகிறது.

Boring முதலீடுகள்

ஒரு காலத்தில் நிலம் வாங்குவது, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவற்றை பலர் Boring முதலீடுகள் என்று கருதினர். ஆனால் 2026ல் இந்த போரிங் முடிவுகளே முக்கியமானதாக மாறியுள்ளது. இதே 2026ல் ரியல் எஸ்டேட் விற்பனை சரிந்தாலும் நாட்டின் பெரும்பாலான இடத்தில் ரியல் எஸ்டேட் சொத்தின் மதிப்பு அதிகரித்து தான் வருகிறது.

மற்றவர்கள் புதிய புதிய முதலீடுகளை தேடி ஓடிக்கொண்டிருந்தபோது, சில ஸ்மார்ட் முதலீட்டாளர்கள் சம்பளத்தை வைத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை ஸ்திரமாக அமைத்துக் கொண்டிருந்தனர். இதுதான் உண்மையான career hack எனவும் கருத்து நிலவுகிறது. இதற்கிடையில் புதிய திறன்களை கற்றுக்கொண்டு வேலையில் வளர்வது மூலம் அடுத்தக்கட்ட ரிஸ்க் முதலீடுகளை தேர்வு செய்யலாம். இத்தகைய கட்டத்தில் குடும்பம் குறித்த அச்சம் இருக்காது, ரிஸ்க் எடுத்து எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

பணவீக்கமும், ரியல் எஸ்டேட் முதலீடும்

10 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடி ரூபாயில் ஒரு தனி வீடு நிலத்துடன் வாங்க முடிந்தது. இன்று அதே தொகையில் ஒரு அப்பார்ட்மென்ட் மட்டுமே கிடைக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு பிறகு, அதே பணத்தில் ஒரு அறை கூட கிடைக்காமல் போகலாம். இதுவே பணவீக்கத்தின் உண்மையான தாக்கம்.

'முதலீடு செய்தால் பணக்காரர் ஆக முடியுமா?' என்பது ஒரு கேள்வி. ஆனால் 'முதலீடு செய்யாமல் இருந்தால் ஏழையாகிவிடுவோம்' என்பது உண்மை. இதற்கான காரணமும் பணவீக்கம் தான்.

சம்பளம் நல்ல நிலையில் இருக்கும் நேரத்திலேயே, அதைப் வீணாக்காமல், சொத்துகளாக மாற்ற வேண்டும் என்பது தானம் முந்தைய தலைமுறையினரிடம் இருந்து கற்றுக்கொள்ளும் பாடம். இதேபோல் cashflow உருவாக்கும் சொத்து என்பது ரியல் எஸ்டேட் சொத்து மட்டுமல்ல உங்களுடைய சைட் பிஸ்னஸ் ஆகவும் இருக்கலாம். அல்லது தொடர்ந்து டிவிடென்ட் வருமானம் அளிக்கும் பங்கு முதலீடாகவும் இருக்கலாம்.

தரமான முதலீடுகளை தேர்வு செய்து, சிறிய அளவிலான ரிஸ்க் முதலீட்டை மட்டுமே தேர்வு செய்து, நீண்டகால பார்வையுடன் முதலீடு செய்வது மட்டுமே வாழ்க்கையில் நிச்சயமான பாதுகாப்பை உருவாக்கும். மேலும் உங்களுடைய போர்ட்போலியோ இந்த ஏஐ, போர் போன்ற தாக்கத்தில் இருந்து முழுமையாக பாதுகாக்கப்பட்ட முதலீடாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+