பட்ஜெட் 2018: மாத சம்பளம் வாங்குவோரின் டாப் 5 கோரிக்கைகள் இவைதான்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாத சம்பளம் பெறுவோருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி- வீடியோ

    டெல்லி: நாளை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் தொடர்பாக பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தாலும், பெரும்பாலானோரின் ஒரே கேள்வி, தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயருமா என்பதுதான்.

    கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போதும், மாத சம்பளம் வாங்குவோருக்கு, வருமான உச்சவரம்பு மீது எதிர்பார்ப்பு இருந்தது. வருமான உச்சரவரம்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அதிகரிக்கவி்லைல என்றபோதிலும், சிறு சலுகையை அறிவித்தார்.

    அதன்படி, மாத வருவாய் ரூ.2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரையில் உள்ளவர்களுக்கான வரி விகிதத்தை 10 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தார் ஜேட்லி.

    சர்வேக்களில் மக்கள் கருத்து

    சர்வேக்களில் மக்கள் கருத்து

    இந்த வரிக்குறைப்பால் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை என மாத வருவாய் பிரிவினர் குமுறுகிறார்கள். வரி ஏய்ப்பு செய்யாமல் ஒழுங்காக வருமான வரி செலுத்தும் பிரிவினர் மாத வருவாய் பிரிவினர்தான். தொழிலதிபர்களுக்கு, வணிகர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளும், விவசாயிகளை போல வரியில் இருந்து விலக்கு பெறும் உரிமையும் மாத வருவாய் பிரிவினருக்கு கிடையாது. இதை கருத்தில் கொண்டு, தங்களுக்கு கையில் பணம் சேரும் வகையில் பட்ஜெட்டில் சலுகை காட்ட வேண்டும் என்பது மாத வருவாய் பிரிவினர் கோரிக்கை. பல்வேறு சமீபத்திய சர்வேக்களில் மக்கள் இந்த கோரிக்கையை முன் வைப்பதை பார்க்க முடிந்தது.

    வருமான வரி விலக்கு உச்சரவரம்பு

    வருமான வரி விலக்கு உச்சரவரம்பு

    வரி மற்றும் அறிவுரை நிறுவனம் நடத்திய சர்வேயில் 69 சதவீத மக்கள் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை தற்போதுள்ள அடுக்கில் (ஸ்லாப்) இருந்து கூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர். ஆண்டு வருவாய் வரி விலக்கு உச்சவரம்பை இப்போதுள்ள ரூ.2.5 லட்சத்திலிருந்து 4 லட்சம் ரூபாயாகவோ அல்லது குறைந்தது ரூ.3 லட்சம் ரூபாயாகவோ கூட்ட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

    மருத்துவ செலவு கூடிப்போச்சே

    மருத்துவ செலவு கூடிப்போச்சே

    ஓராண்டில் ரூ.15,000 வரை மெடிக்கல் செலவீனங்களுக்கு வருமானத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த தொகை 1999ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவ செலவீனங்கள் அதிகரித்துள்ளதால், ஆண்டுக்கு ரூ.50,000 வரை மெடிக்கல் செலவீனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை.

    சேமிப்புக்கு ஊக்கம்

    சேமிப்புக்கு ஊக்கம்

    80C பிரிவின்கீழ், பல்வேறு வகையான சேமிப்புகளுக்கு ரூ.1.50 லட்சம் வரை விலக்கு வழங்கப்படுகிறது. இதனால் சேமிக்கும் பழக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. ரூ.1 லட்சமாக இருந்த உச்சவரம்பு 2014-15ல் ரூ.1.50 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது மற்றொரு கோரிக்கை.

    பெங்களூர், ஹைதராபாத், புனே

    பெங்களூர், ஹைதராபாத், புனே

    ஹெச்.ஆர்.ஏ எனப்படும் வீட்டு வாடகை படி சலுகை, டெல்லி, மும்பை, கோல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களுக்கு அதிகமாக வழங்கப்படுகிறது. இவைவ மெட்ரோபாலிட்டன் சிட்டிகள் என கணக்கில் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதன்பிறகு பெரிதாக வளர்ந்துவிட்ட நகரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. உதாரணத்திற்கு, பெங்களூர், ஹைதராபாத் நகரிலுள்ள வாடகை மற்ற 4 பெரு நகரங்களுடன் ஒப்பிட்டால் குறைவானது கிடையாது. எனவே, பெங்களூர், ஹைதராபாத், புனே, அகமதாபாத், ஜெய்ப்பூர், குர்கான் ஆகிய நகரங்களையும், இதில் சேர்க்க வேண்டும் என்பது பெரும்பாலான மாதச்சம்பளக்காரர்கள் கோரிக்கை.

    நிலையான கழிவு

    நிலையான கழிவு

    2006-07 முதல் நிறுத்தப்பட்ட, நிலையான கழிவு திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஒரு குறிப்பிட்ட தொகையை அது ஆண்டுக்கு ரூ.30,000 வரையில் இருக்கலாம், அதற்கு வருமான வரியில் கணக்கு காட்ட தேவையில்லை என அறிவிக்க வேண்டும். இதன்மூலம், மாதச் சம்பள ஊழியர்கள் கையில் பணப்புழக்கம் இருக்கும் என்பது மக்களின் கோரிக்கை. மோடி அரசு இந்த கோரிக்கைகளை பரிசீலிக்குமா? நாளை காலை 11 மணிக்கு விடை தெரியும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+