கருகிய குறுவை நெற்பயிர்.. நாகை மாவட்டத்தில் வேதனையில் விவசாயி உயிரிழப்பு
நாகை: நாகை மாவட்டம் திருவாய்மூரில் 15 ஏக்கரில் சாகுபடி செய்து இருந்த குறுவை நெற்பயிர் தண்ணீர் இன்றி கருகியதால் வேதனை அடைந்த விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பயிர்கள் கருக தொடங்கின. நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில், பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்திருந்தனர். ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகின. குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 30,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுவதால் நீர் கிடைக்க இனியும் வழியில்லை என முடிவெடுத்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நாகை மாவட்டம் திருவாய்மூரில் கருகிய நெற்பயிரால் வேதனையில் இருந்த விவசாயி அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். விவசாயி ராஜ்குமார் தனது 15 ஏக்கர் நிலத்தில் குறுவை நெற்பயிர் சாகுபடி செய்து இருந்தார். கூட்டுறவு வங்கியில் 2.5 லட்சம் விவசாய கடன், எட்டுக்குடியில் ரூ.3 லட்சம், உள்ளூரில் ரூ.2 லட்சம் கடனாக வாங்கியிருந்த நிலையில் வேதனையால் விவசாயி ராஜ்குமார் உயிரிழந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications