அய்யோ பாலத்தை காணோம்.. இரவோடு இரவாக 30 டன் இரும்பு பாலத்தையே திருடிய கும்பல்.. பெரிய ஷாக்
சண்டிகர்: சத்தீஸ்கரில் ஆற்றை கடக்க 60 அடி நீளத்தில் 30 டன் எடையில் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை இரவோடு இரவாக ஒரு கும்பல் திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாக திருட்டில் ஈடுபடுவோர் வீடு புகுந்து நகை, பணத்தை அள்ளி சென்று இருப்பதை நாம் பார்த்து இருப்போம். அதேபோல் கார், பைக் திருட்டு சம்பவங்களையும் நாம் பார்த்து இருப்போம்.

ஆனால் சத்தீஸ்கரில் ஒரு கும்பல் 30 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தையே இரவோடு இரவாக திருடி சென்றுள்ளது. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியில் நடந்துள்ளது.
கோர்பா நகராட்சியின் வார்டு 17 ல் ஓடும் ஆற்றை கடக்கவும், இருகிராமங்களை இணைக்கும் வகையில் இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. 40 ஆண்டு பழமையான இந்த மேம்பாலம் மொத்தம் 30 டன் எடை கொண்ட இரும்பை பயன்படுத்தி 60 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டு இருந்தது. இந்தபாலத்தை பொதுமக்கள் பயன்படுத்தி ஆற்றை கடந்து வந்தனர்.
இந்நிலையில் தான் நேற்று காலையில் பாலத்தை நோக்கி வந்த மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த பாலத்தை காணவில்லை. வடிவேலு ஒரு படத்தில் ‛அய்யா கிணத்தை காணவில்லை.. வட்ட கிணறு சார்.. வற்றாத கிணறு சார்' என்று போலீசில் புகார் செய்வார். அதுபோல் தான் அந்த பகுதி மக்களும் போலீசாரிடம் பாலத்தை காணவில்லை என்று புகாரளித்தனர்.
போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பாலம் கியாஸ் கட்டர் உதவியுடன் வெட்டி எடுத்து மர்மகும்பல் திருடி சென்றது தெரியவந்தது. இந்த பாலம் என்பது ரயில் தண்டவாளத்துக்கு பயன்படுத்தும் கிரீடர் போல் இரும்பு கிரீடர் பயன்படுத்தி, மேற்பகுதியில் அடர்த்தியான இரும்பு தகடு வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த பாலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த கும்பல் நகராட்சி குடிநீர் திட்டத்துடன் தொடர்புடையஇரும்பு குழாயையும் திருடி சென்றது.
இதுதொடர்பாக கவுன்சில் லட்சுமண் ஸ்ரீவாஸ் கூறுகையில், ‛‛இங்குள்ள பாலம் 40-50 ஆண்டுகள் பழமையானது. இது பொதுமக்களின் போக்குவரத்திற்கு ஒரு முக்கிய வழியாக இருந்தது. இரவில் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். முழுப்பாலமும் திருடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குடிநீர் திட்டத்துடன் தொடர்புடைய இரும்பு குழாயையும் திருடி சென்றனர்.'' என்று கூறினார்.
முதற்கட்டமாக போலீசார் அந்த பகுதியில் உள்ள பழைய இரும்பு கடைகளில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது வரை திருட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications