காய்கறி கழிவோடு தங்க நகையை சாப்பிட்ட மாடு.. சாணிக்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தங்க நகையை சாப்பிட்ட மாடு..சாணிக்காக காத்திருக்கும் குடும்பம் | Bull Eats 40 Grams Of Gold Ornaments

    சண்டிகர்: ஹரியானாவின் சிர்சாவில் 40 கிராம் தங்க நகைகைளை காளை மாடு காய்கறி என நினைத்து சாப்பிட்டுவிட்டது. இதனால் காளை மாடு சாணத்தில் எப்படியாவது தங்கம் வந்துவிட வேண்டும் என அந்த குடும்பத்தினர் பரிதவிப்புடன் உள்ளனர்.

    ஹரியானா மாநிலம் சிர்சாவின் கலனவல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஜனகராஜ். இவரது மனைவி மற்றும் மருமகள் ஆகியோர் வீட்டின் சமையலுக்காக காய்கறிகளை நறுக்கும் போது, ஒரு கிண்ணத்தில் தங்க நகைகளை கழட்டி வைத்திருக்கிறார்கள்.

    A bull ate about 40 grams of gold ornaments that belonged to a woman living in sirsa, Haryana

    பின்னர் அந்த கிண்ணத்திலேயே மறந்தபடி காய்கறிகளின் கழிவுகளை கொட்டியுள்ளனர். மொத்தமாக தங்கம் இருப்பது தெரியாத அளவுக்கு காய்கறிகள் கிண்ண்த்தில் நிறைந்து இருந்திருக்கிறது. சிறிதுநேரத்திற்கு பிறகு தங்கம் இருந்த கிண்ணத்தை அப்படியே தூக்கி குப்பையில் போட்டுள்ளனர்.

    இச்சம்பவம் நடந்த பின்னர் தங்கம் காணவில்லை என்பதை உணர்ந்த ஜனகராஜ் குடும்பத்தினர்.தஙகத்தை தேடியிருக்கிறார்கள். அப்போது தான் தங்கத்தை காய்கறியுடன் வைத்து குப்பையில் வீசியது தெரியவந்தது. சிசிடிவியில் பார்த்த போது ஒரு காளை மாடு அவர்களின் காய்கறி கழிவுகள் மற்றும் தங்கத்தை தின்றது தெரியவந்தது.

    A bull ate about 40 grams of gold ornaments that belonged to a woman living in sirsa, Haryana

    இந்த சம்பவம் குறித்து ஜனகராஜ் மேலும் கூறுகையில், தங்கதை காளை மாடு தின்றதை பார்த்த நாங்கள் காளை மாட்டை தேடி கண்டுபிடித்தோம். அதன்பிறகு கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்தோம்.அந்த காளை மாட்டை வீட்டின் அருகில் திறந்த வெளியில் காட்டிப்போட்டு உணவளித்து வருகிறோம். காளை மாடு போடும் சாணத்தில் இருந்து தங்கம் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை தங்கம் கிடைக்காவிட்டால் அந்த காளை மாட்டை நாங்கள் கோசாலைக்கு அனுப்பி விடுவோம் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+