பஞ்சாபில் காங்கிரஸ் தான்.. பாஜகவுக்கு தண்ணி காட்டும் ஆம் ஆத்மி! ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு
சண்டிகர்: எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரித்துள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 13 லோக்சபா தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு இதில் காங்கிரஸ் 8 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. அதேபோல பாஜக மற்றும் அகாலிதளம் கூட்டணி 4 இடங்களை வென்றிருந்தது. ஆம் ஆத்மி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை மொத்தமும் மாறும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரித்துள்ளன.

இதற்கு 2022ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2022ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி. எனுவே இந்த முறை ஆம் ஆத்மி 6 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் வாய்ப்பிருந்தால் 1 தொகுதியை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல பாஜக, சிரோன்மணி அகாலிதளம் கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. கூட்டணியுடன் போட்டியிட்டால் தலா ஒரு தொகுதியை கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது.
ஓட்டு சதவிகிதத்தை பொறுத்த அளவில், காங்கிரஸ் 30% வாக்குகளை பெறும், ஆம் ஆத்மி 27 சதவிகிதமும், பாஜக மற்றும் சிரோன்மணி அகாலிதளம் முறையே 16, 17 சதவிகிதம் வாக்குகளை பெற வாய்ப்பிருக்கிறது. அதேநேரம் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புக்கான சாத்தியங்கள் மிக குறைவாகவே இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனெனில் விவசாயிகளின் தொடர் போராட்டம் பாஜக வாக்கு வங்கியை பாதிக்கும்.
காங்கிரசுக்கு குறைவான தொகுதிகள் கிடைக்க காரணம், இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுவதுதான். டெல்லியில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தொகுதி உடன்பாட்டிற்குள் வந்திருக்கின்றன. ஆனால், பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்து களமிறங்கியுள்ளது. தற்போது வரை 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. இதில் 5 பேர் தற்போது மாநில அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications