பஞ்சாப்பில் பல்டி அடிக்கும் அகாலிதளம்- தேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணியா?
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்குப் பின் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக முடிவெடுப்போம் என்று அகாலிதளம் அறிவித்துள்ளது.
Recommended Video
117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சிரோமணி அகாலிதளமும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. பாஜகவும் அமரீந்தர்சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

கருத்து கணிப்புகள்
பஞ்சாப் தேர்தலைப் பொறுத்தவரை தொங்கு சட்டசபைக்கே அதிக வாய்ப்பு என்கின்றன கருத்து கணிப்புகள். ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி ஏற்படும் என்பதும் கருத்து கணிப்புகள் தெரிவித்தவை. அகாலிதளம் கூட்டணிக்கு 3-வது இடமும் பாஜக அணிக்கு 4-வது இடமும் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசலால் ஆட்சியை பறிகொடுக்க அதிக வாய்ப்பிருக்கிறது எனவும் கருத்து கணிப்புகள் சுட்டி காட்டியிருக்கின்றன.

அகாலி தளம் தலைவர்
இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி தொடர்பாக அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா கூறியிருப்பதாவது: நாங்கள் பஞ்சாப் மக்களுக்காக போராடுகிறோம். நான் போட்டியிடும் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் தேவைப்படுகின்றன. அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் ஏழை மக்களுக்கு அரசின் திட்டங்கள் எதுவும் கிடைப்பது இல்லை. அப்பகுதி மிகவும் பின்னடைந்து காணப்படுகிறது.

80 இடங்களில் வெல்வோம்
சட்டசபை தேர்தலில் அகாலிதளம்- பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெறும். 80க்கும் அதிகமாக தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம். பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்வோம். இவ்வாறு மஜிதியா கூறினார்.

களநிலவரம் என்ன?
அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவை எதிர்த்து மஜிதியா போட்டியிடுகிறார். மஜிதியா தொகுதியிலும் பிக்ரம்சிங் மஜிதியா போட்டியிடுகிறார். பஞ்சாப் மாநிலத்தில் கால்நூற்றாண்டு காலமாக பாஜகவுடன் அகாலிதளம் கூட்டணியில் இருந்தது. விவசாய சட்டங்கள் விவகாரத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது. தற்போதைய தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 20 இடங்களையும் கொடுத்துள்ளது அகாலிதளம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications