அதிகரித்த போர் பதற்றம்.. பஞ்சாப்பில் திடீரென நடந்த Blackout Drill.. ஏன் முக்கியம்?
சண்டிகர்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று இரவு திடீரென்று பஞ்சாப்பின் ஃபெரோஸ்பூர் கண்டோன்மென்ட்டில் blackout drill மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த blackout drill என்பது என்ன? ஏன் முக்கியம்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் குண்டு பாய்ந்து பலியாகினர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு தான் பொறுப்பேற்று உள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி வருகிறது. ராணுவம், கடற்படை, விமானப்படைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. விரைவில் பாகிஸ்தான் மீது நம் படை வீரர்கள் தாக்குதல் நடத்துவார்கள். இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தானும் நம் மீது பதில் தாக்குதலை நடத்தும். இதனால் மோதல் வலுத்து போராக மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் திடீரென்று போலீசார் பஞ்சாப்பின் ஃபெரோஸ்பூர் கண்டோன்மென்ட்டில் blackout drill மேற்கொண்டுள்ளனர். இந்த பிளக்அவுட் ட்ரில் என்பது மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டு இரவில் நடக்கும் பயிற்சியாகும். இந்த பயிற்சி என்பது அரை மணிநேரம் வரை நடந்தது.
இந்த இருட்டில் போலீசார் பயிற்சி மேற்கொண்டனர். இரவில் நடமாடும் நபர்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட போர் கால நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இன்று இரவு 9 மணிக்கு தொடங்கிய இந்த பயிற்சி 30 நிமிடம் வரை நடந்தது. போலீசார் பயிற்சிக்கு அந்த கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளின் விளக்குகளை அணைத்து ஒத்துழைப்பு கொடுத்தனர்..
பஞ்சாப் என்பது பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இதனால் காஷ்மீரை போல் பஞ்சாப்பின் எல்லையிலும் போர் பதற்றம் தொற்றி உள்ளது. விரைவில் பாகிஸ்தானுக்கு நம் படை வீரர்கள் பதிலடி கொடுக்கலாம். இது மோதலாக உருவாகும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் இன்று இந்த பயிற்சி என்பது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக பாகிஸ்தான் மீது நம் படைகள் 2 முறை அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளன. புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்களின் மரணத்துக்கு காரணமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 2019 பிப்ரவரியில் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது நம் படை வீரர்கள் வான்வழி தாக்குதல் நடத்தினர்.
அதற்கு முன்பாக கடந்த 2016ம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள உரி அருகே ராணுவ முகாமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய சிறப்புப் படைகள் ஒரு சர்ஜிக்கல் ஸ்ட்டிரைக் நடத்தினர். அந்த வகையில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்த முறையும் பாகிஸ்தான் மீது நம் படை வீரர்கள் தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றனர்.. இதற்கான பயிற்சியை முப்படை வீரர்களும் மேற்கொண்டு வரும் நிலையில் தான் பஞ்சாப்பில் இன்று blackout Drill நடத்தி உள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications