சூட்கேஸில் இளம்பெண் உடல்.. "அந்த இடத்தில்" சிக்ரெட் தீக்காயம்.. அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்த நபர்கள் உடலை சூட்கேஸில் அடைத்து சாலையில் வீசியெறிந்து சென்றுள்ளனர். இதனையடுத்து காவல்துறை உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சூட்கேஸ் கைப்பற்றப்பட்ட பகுதியில் எந்த சிசிடிவி கேமிராவும் இல்லாத நிலையில் இந்த வழக்கை முடிக்க காவல்துறை திணறி வருகிறது.

இந்தியா
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த ஓராண்டில் மட்டும் நாடு முழுவதும் ஏறத்தாழ 60 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 4,28,278 லட்சம் வழக்குகள் பெண்களுக்கு எதிரானவையாகும். கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த குற்றங்களின் எண்ணிக்கை சுமார் 26.35% அதிகரித்துள்ளன. 2021ம் ஆண்டில் மட்டும் 107 பெண்கள் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர், 1,580 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

தகவல்
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது அரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் சாலையில் சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடப்பதாக காவல்துறையினருக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். தான் பயணிகளுக்காக காத்திருந்ததாகவும் இந்த சூட்கேஸ் நீண்ட நேரமாக ஒரே இடத்தில் இருந்த நிலையில் அதை சென்று பார்த்தபோது அது மிகவும் கனமாக இருந்ததால் உனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

சூட்கேஸில்
சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "கண்டெடுக்கப்பட்ட சூட்டேகஸில் இளம்பெண்ணின் உடல் கிடைத்துள்ளது. சூட்கேசிஸ் உடலை அழுத்தி வைப்பதற்காக அப்பெண்ணின் கைக்கால் உடைக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது உடல் கிடைத்தபோது எவ்வித துர்நாற்றமும் வீசாத நிலையில் கொலை இப்போதுதான் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் உடலில் ஆங்காங்கே சிகரெட்டால் தீ வைக்கப்பட்ட தழும்புகள் உள்ளன. பெண்ணின் பிறப்புறுப்பிலும் தீக்காயங்கள் உள்ளன.

சிசிடிவி
இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இளம்பெண்ணின் கையில் ஓம் என பச்சை குத்தப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அக்கம் பக்கத்தில் காணாமல் போனவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதயில் சிசிடிவி கேமிரா இல்லாததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நிச்சயம் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவோம்" என்று கூறியுள்ளனர். பட்டப்பகலில் சூட்கேஸில் இருந்து இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications