அடைந்தால் பஞ்சாப் முதல்வர் பதவி! இல்லையேல் காலிஸ்தான் தனிநாடு பிரதமர்- இப்படி சொன்னாரா கெஜ்ரிவால்?
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மேலும் ஒரு புதிய பஞ்சாயத்தாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை காலிஸ்தான் பயங்கரவாதி என முத்திரை குத்தி இருப்பது சர்ச்சையாகி உள்ளது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலோ இதனை அசால்ட்டாக கடந்து செல்லும் வகையில் விளக்கம் அளித்து வருகிறார்.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நாளை மறுநாள் பிப்ரவரி 20-ல் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப்பில் இன்று மாலையுடன் பிரசாரம் முழுமையாக ஓய்வடைகிறது.
பஞ்சாப் தேர்தல் களத்தில் அடுத்தடுத்து தலைவர்களின் பேச்சுகள் சர்ச்சையாகி உள்ளது. பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி பேசுகையில், டெல்லி-பீகார்-உ.பி. பையாக்கள் பஞ்சாப்பை ஆட்சி செய்ய நினைக்கிறார்கள்.. அது நடக்காது என்றார். பையாக்கள் என்ற விமர்சனம் டெல்லி, உ.பி, பீகார் அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது. இதனால் சரண்ஜித்சிங் சன்னி மீது பீகாரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலிஸ்தான் பிரதமர்?
இதற்கு அடுத்ததாக புதிய பூகம்பத்தை வெடிக்க வைத்திருப்பவர் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ்தான். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிக நெருக்கமான இருந்தவர் குமார் விஸ்வாஸ். இவரது வீடியோ ஒன்றை பாரதிய ஜனதா கட்சியினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில், பஞ்சாப் முதல்வர் அல்லது காலிஸ்தான் தனிநாட்டு பிரதமராவதுதான் இலக்கு என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

சீக்கியர் தனிநாடு கோரிக்கை
காலிஸ்தான் என்பது சீக்கியர்களின் நீண்டகால தனிநாடு கோரிக்கை. காலிஸ்தான் தனிநாடு கோரிதான் பிந்தரன்வாலே ஆயுதப் போராட்டம் நடத்தினார். இந்த ஆயுதப் போராட்டத்தை பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பி முடித்து வைத்தார் அன்றைய பிரத்மார் இந்திரா காந்தி. பிந்தரன்வாலே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போராளிகள் பஞ்சாப் பொற்கோவிலில் ரத்த வெள்ளத்தில் சடலங்களாக மிதந்தனர். இதற்கு பழிவாங்கவே சீக்கியர்களால் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.

அப்படி சொன்னாரா கெஜ்ரிவால்?
காலிஸ்தான் கோரிக்கையை இன்னமும் வெளிநாடுகளில் வசிக்கும் சீக்கியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான அமைப்புகளையும் நடத்தி வருகின்றனர். இன்னமும் நமது நாட்டுக்கு காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தால் அச்சுறுத்தல் இருக்கிறது என்கின்றன உளவு அமைப்புகள். இந்த நிலையில் அடைந்தால் பஞ்சாப் முதல்வர் பதவி.. இல்லையேல் காலிஸ்தான் தனிநாட்டின் பிரதமர் பதவி என கெஜ்ரிவால் கூறியதாக சொல்லப்படுவது பெரும் விவாதப் பொருளாகி உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் சரண்ஜித்சிங் சன்னி.

கெஜ்ரிவால் விளக்கம்
அதேநேரத்தில் காலிஸ்தான் விவகாரத்தை அம்பலப்படுத்தியதால் குமார் விஸ்வாஸின் உயிருக்கு ஆபத்து என மத்திய அரசு கருதுகிறது என்கின்றன சில தகவல்கள். இதனால் குமார் விஸ்வாஸுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் கெஜ்ரிவால் தரும் விளக்கங்கள் இன்னும் விவாதங்களை கிளப்பி வருகின்றன. இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், அன்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பகத்சிங்கை பயங்கரவாதிகள் என்றனர். இன்று அதே பயங்கரவாத முத்திரையை எங்கள் மீது குத்துகின்றனர். வரலாறு திரும்பி இருக்கிறது. ஆனால் மக்கள் உண்மை என்ன என்பதை அறிவார்கள் என்றார். ஓயாத அக்கப்போர் பேரலைகள்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications