சொத்துக்களை இப்பவே என் பேரில் உயில் எழுது.. அம்மாவின் உடம்பு மீது ஏறி உட்கார்ந்து.. இவரும் பெண்ணா?
சண்டிகர்: அரியானா மாநிலத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியும், பரபரப்பும் இன்னமும் அடங்கவில்லை.. இது தொடர்பான விசாரணையை போலீசார் உடனடியாக துவங்கிவிட்டார்கள். சம்பந்தப்பட்ட பெண் மீது, பிஎன்எஸ் 2023 பிரிவுகள் 115, 127(2), 296, 351(3), மற்றும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம், 2007 இன் பிரிவு 24 இன் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
அரியானா மாநிலம் ஹிசாரில் அந்த பெண் வசித்து வருகிறார்.. இவர் தன்னுடைய அம்மாவை , சொத்துக்காக அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.. சம்பவத்தன்றும் இப்படித்தான், பெற்ற தாயை சித்திரவதை செய்திருக்கிறார். இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

கையெடுத்து கும்பிட்ட தாய்
அந்த வீடியோவில் தாயார் நிர்மலாதேவி, ஒரு படுக்கையில் உட்கார்ந்து, அழுதுகொண்டிருக்கிறார். அப்போது மகள் ரீட்டா, தன்னுடைய அம்மாவை திட்டிவிட்டு, அவரை காலிலேயே கடுமையாக தாக்குகிறார்.. தாயின் அலறல்களைப் பொருட்படுத்தாமல் அவரது தொடையிலேயே அடிக்கிறார்.
தன்னுடைய அம்மாவின், தலைமுடியை இழுத்து அடிக்கிறார். இதனால் வலி தாங்க முடியாமல், அம்மா கதறி துடிக்கிறார்.. என்னை விட்டுடும்மா என்று மகளை பார்த்து, இரு கைகளையும் கூப்பி கெஞ்சுகிறார்..
அப்போதும் மகள் விடுவதாக இல்லை.. "நீயெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு உயிரோடு இருப்பே?" என்று ஏளனமாக பேசிக்கொண்டே மகள் மீண்டும் அம்மாவை துன்புறுத்துகிறார். ஒருகட்டத்தில் மேலும் ஆவேசம் அடைந்த மகள், "உன்னுடைய ரத்தத்தையே குடிப்பேன்" என்று சொல்லி மீண்டும் மீண்டும் அம்மாவை அடிக்கிறார்.
ரத்தத்தை குடிப்பேன்
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண் மீது, அவரது சகோதரர் போலீசில் புகார் தந்துள்ளார்.. அந்த புகார் மனுவில், "என்னுடைய சகோதரியான ரீட்டாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது. ஆனால், கணவனை பிரிந்து மறுபடியும் எங்கள் வீட்டிற்கே வந்துவிட்டார்..
அதிர்ச்சி தந்து வரும் வீடியோ
ஏற்கனவே, ஒரு சொத்தை ரூ.66 லட்சத்துக்கு விற்றவர், இப்போது குடும்பத்தின் பெயரிலுள்ள வீட்டை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்குமாறு, என்னுடைய அம்மாவை, என் சகோதரி ரீட்டா அடித்து துன்புறுத்துகிறார். ரீட்டாவால் என்னுடைய அம்மா பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளார்.. என்னுடைய அம்மாவை, சகோதரி சிறைபிடித்தும் வைத்திருக்கிறாள். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். எனவே, என் சகோதரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ரீட்டாவை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். சொத்துக்காக பெற்ற தாயை , மகளே அடித்து கொடுமைப்படுத்தும் சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications