ஹரியானா தேர்தல் முடிவு.. மிகப்பெரிய ட்விஸ்ட்.. மெஜாரிட்டி பெற்ற பாஜக.. காங்கிரஸ் பின்னடைவு
சண்டிகர்: ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இதில் காங்கிரஸ் 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காலை முதல் முன்னிலை வகித்த காங்கிரஸ் பின்னடைவை சந்தித்த நிலையில் பாஜக முன்னிலையை பெற்று உள்ளது. அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வருகின்றன.
ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கே மெஜாரிட்டி பெற 45 இடங்கள் தேவை. இந்த நிலையில் பாஜக 47 இடங்களில் முன்னிலை பெற்று கிட்டத்தட்ட அங்கே ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது.

தேர்தல் முடிவுகள்: அங்கே கட்சிகள் போட்டியிட்ட இடங்கள்
பாஜக - 89 இடங்களில் போட்டி
இந்தியா கூட்டணி - காங்கிரஸ் 89 இடங்களில் போட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்தில் போட்டி
ஜேஜேபி - ஏஎஸ்பி(கேஆர்) கூட்டணி: ஜனநாயக ஜனதா கட்சி 66 இடங்களில் போட்டி, ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) 12 இடங்களில் போட்டி
ஆம் ஆத்மி - 88 இடங்களில் போட்டி
ஹரியானா தேர்தலில் 101 பெண்கள் மற்றும் 464 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கிட்டத்தட்ட 68 சதவிகித வாக்குகள் வரை இந்த தேர்தலில் பதிவாகி உள்ளன.
முந்தைய தேர்தல் விவரம்: கடந்த 2019 தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டணி அமைத்து மாநில அரசாங்கத்தை அமைத்தது, அப்போது மனோகர் லால் கட்டார் முதலமைச்சரானார். ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க மெஜாரிட்டி பெற 46 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் மற்றும் ஹரியானா லோக்கித்ட் கட்சி தலா ஒரு இடங்களில் வென்றிருந்தது. அதேபோல, சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வென்றிருக்கின்றனர்.
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மையாக மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக ஆட்சியை பிடித்தது. இதற்காக கூட்டணி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஜனநாயக ஜனதா கட்சி தனது ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறது. எனவே முதலமைச்சர் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நயாப் சிங் சைனி பாஜக சார்பாக சுயேட்சைகள் உதவியுடன் முதல்வரானார். ஆனால் கடந்த மே மாதம் 3 சுயேச்சை இவருக்கான ஆதரவை வாபஸ் வாங்கிய நிலையில், அங்கே பாஜக மைனாரிட்டி ஆட்சி நடத்தி வந்தது. இந்த நிலையில் தற்போது ஹரியானா தேர்தல் முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.
ஏற்கனவே ஹரியானா எக்ஸிட் போல் வெளியான நிலையில், பாஜக படு தோல்வி அடையும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று பல கருத்து கணிப்புகள் தெரிவித்தன. இந்த முறை காங்கிரஸ் கூட்டணி முழு மெஜாரிட்டி பெறும், சுயேச்சை ஆதரவு தேவை இல்லாமல்.. அங்கே கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கணிப்புகளை பொய்யாகி பாஜக மெஜாரிட்டி இடங்களில் முன்னிலை வகிக்கிறது.












Click it and Unblock the Notifications