மகாராஷ்டிராவில் ஆல் இஸ் வெல்.. ஹரியானாவில்தான் இழுபறி. மீண்டும் பாஜக ஆட்சியா? காங்கிரஸ் தடுக்குமா?
சண்டிகர்: பெரும்பான்மை பலத்தை பெற முடியாவிட்டாலும், மீண்டும் ஆட்சியமைக்கும் ஆர்வத்தில் உள்ள ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஆளுநரை சந்திக்கிறார்.
மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 46லாவது வென்றால்தான் ஆட்சியமைக்க முடியும். ஆனால், 40 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது.
ஆனால், ஜனநாயக் ஜனதா என்ற புதிய கட்சி 10 தொகுதிகளை வென்று, கிங் மேக்கராக உருவாகியுள்ளது. காங்கிரஸ் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று, 1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஜனநாயக் கட்சி ஆதரவை பெற அக்கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுத்தரவும் காங்கிரஸ் தயாராகிவிட்டது.

சுயேச்சைகள் ஆதரவு
ஆனால் சுமார் 7 சுயேச்சைகள் ஆதரவுடன், ஆட்சியமைத்துவிடலாம் என மனோகர் லால் கட்டார் திட்டமிட்டுள்ளார். மாலை 6 மணிக்கு அவர் ஹரியானா ஆளுநரை சந்திக்க கால அவகாசம் கேட்டுள்ளார். தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜகவையே முதலில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் காங்கிரஸ் வியூகம்
அதேநேரம், கர்நாடகாவில் இப்படித்தான், பெரும்பான்மை பெறாமலேயே, சுயேச்சைகளையும், பிற கட்சி எம்எல்ஏக்களையும் நம்பி கடந்த ஆண்டு பொதுத்தேர்தலையடுத்து ஆட்சியமைத்தார் பாஜகவின் எடியூரப்பா. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தார்.

கலைந்த கர்நாடக அரசு
இதன்பிறகு தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. ஆனால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டதாலும், பாஜகவின் ஆபரேஷன் தாமரையாலும் அங்கு ஆட்சி கலைந்து, இப்போது பாஜக ஆட்சி நடக்கிறது.

பரபரப்பு
இதேபோல ஹரியானாவில் பாஜகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியுமா, அல்லது காங்கிரஸ் ஜனநாயக் ஜனதா கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைக்குமா என்ற உச்சகட்ட பரபரப்பு ஹரியானாவில் நிலவுகிறது.

மகாராஷ்டிரா
அதேநேரம், மகாராஷ்டிராவில், பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி பெரும்பான்மைக்கு தேவைப்படும் இடத்தை வென்றுவிட்டது. ஆனால் சிவ சேனாவின் பலம் அதிகரித்துள்ளதால், அது கேட்கும் கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டிய நிலையில் பாஜக உள்ளது. மற்றபடி அங்கு எல்லாமே சுபமாக முடிந்துவிட்டது.
-
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications