ஹரியானாவில் பாஜகவுக்கு பேரிடி.. 50-64 தொகுதிகளை அள்ளும் காங்கிரஸ்.. எக்சிட் போல் சர்வே
சண்டிகர்: ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. Dhuruv Research வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜகவுக்கு படு தோல்வி கிடைக்கும் என கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.
ஹரியானா மாநிலத்தில், நயாப் சிங் சைனி தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அதன் பதவிக்காலம் முடிவடைவதால், இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஹரியானாவில் 90 சட்டம்னற தொகுதிகள் உள்ளன. ஒரே கட்டமாக இங்கு தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்தது.

ஹரியானா தேர்தல் களத்தில் 1,031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில், முதல்வர் நயாப் சிங் சைனி, எதிர்க்கட்சி தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா, ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சவுதாலா, லோக்தளம் தலைவர் அபய்சிங் சவுதாலா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள் ஆவர். ஹரியானாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.
பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. லோக்தளம்-பகுஜன் சமாஜ் கட்சி, ஜனநாயக ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணியாக போட்டியிடுகின்றன. ஹரியானாவில் ஒரு கட்சி தனித்த்து ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெறுவது அவசியம். தேர்தல் முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
dhruv research என்ற சர்வே நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவின் படி ஹரியனாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்க்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம்: -
பாஜக: 22-32
காங்கிரஸ்: 50-64
ஜேஜேபி+: 0
ஐஎன்.எல்.டி: 0
மொத்த தொகுதிகள் 90. பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் 46 ஆகும். dhurv research கருத்துக்கணிப்புகளின் படி காங்கிரஸ் கட்சிக்கு 64 தொகுதிகள் வரை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி பார்தால் அந்த கட்சி எந்த சிக்கலும் இன்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஹரியானதேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 8 ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டில் 47 இடங்களை வென்ற பாஜக எளிதாக ஆட்சிய பிடித்தது. ஆனால், கடந்த 2019 சட்டமன்றத் தேர்தலில், 40 தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு கிடைத்தது.பெரும்பான்மைக்கு தேவையான ஒரு சீட் இல்லாததால், 10 தொகுதிகளை வென்ற மாநிலக் கட்சியான ஜேஜேபி-ன் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைத்தது பாஜக.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்படவே, கடந்த மார்ச் மாதத்தில், ஜேஜேபி ஆதரவை திரும்ப பெற்றது. இதனால் சுயேச்சைகளில் ஆதரவுடன் பாஜக ஆட்சியை வைத்துள்ளது. எனவே ஹாட்ரிக் வெற்றியை பெற பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவற்றை முன்வைத்து காங்கிரஸ் பிரசாரம் மேற்கொண்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications