ஹரியானாவில் காங்கிரஸ் அலை இல்லை சுனாமி! "ஜாட் + தலித்.." ராகுல் போட்ட ஸ்கெட்ச்! கை மேல் கிடைத்த பலன்
சண்டிகர்: ஹரியானாவில் நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மாலை போஸ்ட் போல் சர்வே வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கும் என்றே கூறப்பட்டு இருந்தது. காங்கிரஸ் கட்சி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற மூன்று காரணங்கள் உள்ளதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஹரியானாவில் இப்போது நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக பூபிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் களமிறங்குகிறது.

அங்கு மொத்தம் 90 சீட்கள் இருக்கும் நிலையில், 46 இடங்களில் வெல்லும் கட்சிக்கே பெரும்பான்மை கிடைக்கும். நேற்றைய தினம் போஸ்ட் போல் சர்வே வெளியான நிலையில், அதில் பெரும்பாலான சர்வேக்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்றே கூறப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் சுனாமி: அதுவும் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் அலை இல்லை.. சுனாமியே வீசும் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்காக 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலில் மாநிலத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள மனநிலை. கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சியை அமைக்க முடிந்தது.
ஜாட் மக்கள் ஆதரவு: அடுத்தது ஜாட் மக்களின் வாக்குகள். கடந்த முறையே ஜாட் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்ற போதிலும் அவர்கள் வாக்கு காங்கிரஸ் கட்சிக்கும் வரவில்லை. பிராந்திய கட்சியான ஜேஜேபி கட்சிக்கே சென்றது. ஜேஜேபி கட்சி 10 சீட்களை வெல்ல பாஜக மீது ஜாட் மக்கள் கொண்ட கோபமே முக்கிய காரணம்.
ஆனால், அதே ஜேஜேபி கட்சி தேர்தலுக்குப் பிறகு பாஜக உடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. குறிப்பாக விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராகவும் சில கருத்துகளைத் தெரிவித்தனர். இதனால் ஜேஜேபி மீது ஜாட் மக்கள் மிகக் கடுமையான கோபத்தில் உள்ளனராம். இதனால் கடந்த முறை 10 சீட்களில் வென்ற ஜேஜேபி இந்த முறை ஓரிரு இடங்களில் வெல்வதே கடினம் என்கிறார்கள்.
நோ சான்ஸ்: அதேபோல், அபய் சௌதாலாவின் இந்தியத் தேசிய லோக் தளத்திற்கும் ஜாட் மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை. ஜாட் சீக்கியர்கள் மற்றும் பிற விவசாய சமூகங்கள் தவிர, ஜாட்களை உள்ளடக்கிய 25% மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆனால், ஜாட் ஆதரவும்+ அரசுக்கு எதிரான மனநிலையும் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி அமைக்க போதுமா என்றால் போதாது என்பதே பதில். அங்குக் கணிசமான மக்கள்தொகையில் இருக்கும் தலித் மக்கள் ஆதரவும் தேவை.
தலித் மக்கள்: இங்கு தான் காங்கிரஸின் தலித் முகமாக அறியப்படும் குமாரி செல்ஜா பங்கு முக்கியமானதாக மாறுகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ளே சில உட்கட்சி பூசல் இருந்ததால் தொடக்கத்தில் குமாரி செல்ஜா பிரச்சாரம் செய்யாமலேயே இருந்தார். ஆனால், ராகுல் காந்தி வருகைக்குப் பின்னர் எல்லாம் மாறியது. குமாரி செல்ஜா மாநிலம் முழுக்க பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். அதுவும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமானதாக மாறியது.
அதாவது மாநிலத்தில் அரசுக்கு எதிரான மனநிலை + ஜாட் மக்களின் நிலைப்பாடு+ தலித் மக்கள் ஆதரவு ஆகியவை சேர்ந்து தான் பாஜகவை துடைத்தெறிகிறது. காங்கிரஸ் சுனாமிக்கும் இதுவே காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஹரியானாவில் காங்கிரஸ் இதுவரை பெறாத மிகப் பெரிய வெற்றியை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications