ஹரியானா: தொடரும் புல்டோசர் நடவடிக்கை-கல்வீச்சு களமான ஹோட்டல் இடிப்பு- இண்டர்நெட் சேவை தடை நீட்டிப்பு
சண்டிகர்: மணிப்பூர் மாநிலத்தை தொடர்ந்து வன்முறை வெடித்த ஹரியானாவில் இன்றும் புல்டோசர் மூலம் கட்டிடங்களை இடிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டுள்ளது. மேலும் ஹரியானாவில் இண்டர்நெட் சேவை தடை மேலும் சிலநாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஹரியானா முழுவதும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 216 ஆகவும் அதிகரித்துள்ளது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் வெடித்தது. இம்மோதல் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இம்மோதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்; சுமார் 50,000 பேர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

நாட்டின் வடமாநிலங்களில் ஒன்றான தலைநகர் டெல்லியை ஒட்டிய ஹரியானாவில் மத மோதல் வெடித்துள்ளது. ஹரியானாவின் நூ மாவட்டத்தின் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் பேரணி நடத்தினர். இப்பேரணியில் இஸ்லாமியர்களை எரித்து படுகொலை செய்த மோனு மானேசர் பங்கேற்கக் கூடும் என செய்தி பரவியதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு பதிலடியாக குருகிராமில் பல்வேறு தீ வைப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனையடுத்து ஹரியானாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

ஹரியானாமாநிலத்தில் இண்டர்நெட்சேவைகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. இணையசேவை துண்டிப்பு வரும் 8- ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரியானா மோதல்களை தடுக்கிறோம் என்ற பெயரில் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது ஹரியானா அரசு.
பாஜக ஆளும் மாநிலங்களில் மிகப் பெரும் குற்ற செயல்கள் நிகழ்ந்தால், அதனுடன் தொடர்புடையவர்களின் சொத்துகளை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்குவது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கையாக உள்ளது. இதே பாணியில் ஹரியானாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

இன்றும் இந்த புல்டோசர் நடவடிக்கை, ஹரியானாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. ஹரியானாவில் கல்வீச்சு சம்பவங்களுக்கு களமாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஹோட்டல் ஒன்றையும் ஹரியானா மாநில அரசு அதிகாரிகள் புல்டோசர் மூலமாக இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். ஹரியானாவிலும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications