பட்டென கிளாஸில் நதிநீரை அள்ளி.. "புனிதமானது" என சொல்லி குடித்த பகவந்த் மான்.. இப்ப திடீர்னு அட்மிட்
கிளாஸில் நதிநீரை அள்ளி குடித்த பஞ்சாப் முதல்வருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திடீரென உடல்நலக் கோளாறு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அத்துடன், மானின் வீடியோ ஒன்றும் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video
பஞ்சாப்பில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. இங்குள்ள சுல்தான்புர் லோதியில், காலி பெயின் என்ற நதி ஓடுகிறது.
இந்த நதியில்தான், சீக்கிய மத குருவான குருநானக் குளித்தாராம்.. அந்த நதிக்கரையிலேயே அவர் தங்கியுமிருந்ததாக கூறப்படுகிறது... இதனால் சீக்கியர்கள் இதை புனித நதியாக போற்றி வருகிறார்கள்..

க்ளீன் நதி
ஆனால், இந்த நதி மாசடைந்து காணப்படுவதால், இதை தூய்மைப்படுத்தும் முயற்சியில், பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும், ராஜ்யசபா எம்பியுமான பாபா பல்பீர் சிங் சீசவால் ஈடுபட்டுள்ளார்.. அதன்படி, 22வது ஆண்டாக நதியை துாய்மைப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது... இதில் பங்கேற்க முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.. முதல்வரும் நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றார்.

பூரிப்பு - மகிழ்ச்சி
அப்போது, நதியில் இருந்து ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து குடித்தார் முதல்வர் பகவந்த்மான்... ஆற்று நீரை குடித்ததுடன், "இந்த வாய்ப்பை பெற்றதற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்" என்றும் பகவந்த் மான் பூரித்து போய் கூறியிருந்தார். பிறகு, உடனே மாநிலத்தில் உள்ள அனைத்து நீர் வழித்தடங்களையும், துாய்மைபடுத்தும் இயக்கத்தையும் அங்கேயே அதிரடியாக அறிவித்தார்...

இந்திரப்பிரஸ்தா
இதற்கு பிறகு, டெல்லிக்கு சென்ற பகவந்த் மானுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது.. வயிற்றுவலியால் அவதிபட்டார்... எனவே, உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.. சண்டிகரிலுள்ள தனது வீட்டிலிருந்து விமானம் மூலம் டெல்லியின் இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக மாநில அரசு எந்த விதத் தகவலும் வெளியிடவில்லை...அசுத்தமான நதி நீரைக் குடித்ததால்தான், அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது..

கிளாஸ் தண்ணீர்
இதனிடையே, பகவந்த் மான் ஆற்றுநீரைக் குடிக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கின்றன. கடந்த 17-ம் தேதி, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலேயே இந்த வீடியோ வெளியாகி இருந்தது.. பகவந்த் மான், ஆற்றிலிருந்து தண்ணீரை டம்ளரில் எடுத்து அப்படியே குடிக்கிறார்.. இதனால், கழிவுநீர் கலந்து வரும் அந்த ஆற்று தண்ணீரை குடித்ததன் விளைவாகவே மானுக்கு வயிற்றில் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது..
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications