ஹரியானாவில் காங்கிரஸ் தான் ஜெயிக்குமா? 2014 + 2019 தேர்தலில் எக்சிட் போல் அப்படியே பலித்ததா? நிலவரம்
சண்டிகர்: ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தெர்தல் நடந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றே கூறியுள்ளன. இதனால் இந்த கருத்துக்கணிப்புகள் அப்படியே பலிக்குமா என்று காங்கிரசார் எதிர்பார்க்கும் நிலையில், கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களில் எக்சிட் போல் எந்த அளவு துல்லியமாக இருந்தது என்பதை இங்கே பார்க்கலாம்.
ஹரியானாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 75.54 சதவிகித வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் பாஜகவிற்கு 47 தொகுதிகள் கிடைத்தது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட கூடுதாலக இரண்டு இடங்கள் பெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

2014 தேர்தல் முடிந்ததும் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்றே கூறின. இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கிட்டத்தட்ட அப்படியே பலித்தது என்றுதான் சொல்லவேண்டும். இந்தியா டிவி - சி வோட்டர், ஏபிபி நியூஸ்- நீல்சன், டைம்ஸ் நவ், நியூஸ் 24 சானக்யா ஆகிய நிறுவனங்கள் பாஜகவிற்கு 37-52 வரை சீட்கள் கிடைக்கும் என்று கணித்தன. ஏறத்தாழ இதன்படியே ரிசல்டும் அமைந்தது.
ஆனால், 2019 ஆம் ஆம் ஆண்டு தேர்தலின் போது நிலைமை வேறு விதமாக இருந்தது. 2019 ஆம் ஆண்டு பாஜக 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி ஆட்சியை பாஜக அமைத்தது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வேறு விதமாக வெளியாகின. பாஜகவிற்கு 51-78 தொகுதிகள் வரை பாஜகவிற்கு கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின.
குறிப்பாக ஏபிபி சி வோட்டர் நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளில் 78 இடங்கள் பாஜகவிற்கு கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகளை பார்த்தால் பாஜக பெரும்பான்மையை கூட தொட முடியாமல் ததிங்கிணத்தோம் போட்டது. 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமானதாகவும், 2019 ஆம் ஆண்டு கள எதார்த்தத்தை பிரதிபலிக்காமலும் போனது.
இந்த ஆண்டு 2024 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை பாஜக படு தோல்வி அடையும் என்றே கருத்துக்கணிப்புகள் கூறப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறுகின்றன. எனவே இந்த முறை எந்த அளவுக்கு துல்லியமாக இருக்கும் என்பது வரும் 8 ஆம் தேதி தெரிந்துவிடும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications