சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைவிட்டு போன ‘ஆடுகளம்’... ஹரியானாவில் காங்கிரஸை கடைசி நாட்களில் ’காபந்து’ செய்த சோனியா

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP's Manohar Lal Khattar to be sworn-in as the Cheif Minister of Haryana on tomorrow.

    சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் அம்மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அத்துடன் சோனியா காந்தியின் தலைமை மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது இம்முடிவுகள் என்கின்றனர் ஹரியானா காங். தலைவர்கள்.

    ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக இருந்த போது ஹரியானாவில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஓரம்கட்டப்பட்டார். அவருக்கு பதில் அசோக்குமார் தன்வாரை தளபதியாக்கிக் கொண்டார் ராகுல்.

    ஹரியானாவில் பெரும்பான்மை ஜாட் ஜாதியினர் பாஜகவுக்கு எதிராக கொந்தளித்து போயிருக்கின்றனர். பாஜகவோ ஜாட்கள் அல்லாத ஜாதி வாக்குகளை வைத்தே வென்றுவிடுவோம் என கணக்குப் போட்டது.

     ஆதித்ய தாக்ரேதான் முதல்வர்.. போஸ்டர் அடித்து வீதியில் ஒட்டிய சிவ சேனா தொண்டர்கள்.. பாஜக மூவ் என்ன? ஆதித்ய தாக்ரேதான் முதல்வர்.. போஸ்டர் அடித்து வீதியில் ஒட்டிய சிவ சேனா தொண்டர்கள்.. பாஜக மூவ் என்ன?

    ஹூடாவை கழற்றிவிட்ட ராகுல்

    ஹூடாவை கழற்றிவிட்ட ராகுல்

    இந்த சூழலில் ஜாட் ஜாதியை சேர்ந்த ஹூடாவை ஓரம்கட்டினார் ராகுல். இதனால் ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி நின்றது.

    ஆளுக்கு ஒருதிசையில் காங்.

    ஆளுக்கு ஒருதிசையில் காங்.

    அதுவும் சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் ஹூடா ஆதரவாளர்கள் ஒரு பக்கம், அசோக்குமார் தன்வாரின் ஆதரவாளர்கள் இன்னொரு பக்கம் என முறுக்கிக் கொண்டு நின்றனர். அத்துடன் பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைத்து மெகா கூட்டணி அமைக்கவும் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

    ஊடகங்கள் ஆரூடம்

    ஊடகங்கள் ஆரூடம்

    இப்படியான சூழ்நிலையில் ஹரியானாவில் காங்கிரஸ் கதை முடிந்தது.. பாஜகதான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என அனைத்து ஊடகங்களும் எழுதத் தொடங்கின. அந்த நிலையில் காங்கிரஸின் இடைக்கால தலைவராக பொறுப்பேற்ற சோனியா காந்தி ஹரியானாவில் தடாலடி மாற்றங்களை கொண்டு வந்தார்.

    சோனியாவின் அதிரடி

    சோனியாவின் அதிரடி

    காங்கிரஸ் நிர்வாகிகளின் பெரும் அதிருப்திக்குரிய அசோக்குமார் தன்வாரை கட்சி தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு தலித்தான குமாரி செல்ஜாவை மாநில தலைவராக்கினார். அவரையும் ஜாட் ஜாதியை சேர்ந்த ஹூடாவையும் கை கோர்க்க வைத்தார்.

    ஹரியானா நிலவரம்

    ஹரியானா நிலவரம்

    இந்த இருவரும் சோனியாவின் உத்தரவுப்படி செயல்பட ஹரியானா ஆடுகளம் கடைசி 40 நாட்களில் தலைகீழாகிப் போனது. ஜாட்- தலித்துகள் வாக்குகள் தேர்தலில் காங்கிரஸுக்கு பெரும் பலத்தை கொடுத்தது.

    அதகள வெற்றி

    அதகள வெற்றி

    இதனால் சிங்கிள் டிஜிட்டுக்குப் போகும் என்கிற எக்ஸிட் போல் ஆரூடங்களை தவிடுபொடியாக்கி 31 இடங்களை கைப்பற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது காங்கிரஸ். ஒருவேளை ஜேஜேபி உள்ளிட்ட கட்சிகளை அரவணைத்து மெகா கூட்டணியை முன்னரே உருவாக்கி இருந்தால் ஹரியானாவில் காங்கிரஸ் அரியாசனத்தை எளிதாக கூட கைப்பற்றி இருக்கலாம்.

    தேர்தல் முடிவுகள் படிப்பினைகளே!

    English summary
    Here is the story on the Congress back to game in Haryana Assembly Election field.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X