வீட்டு கதவை தட்டி.. தீரன் பட ஸ்டைலில் கொடூர கொலை.. ராஜஸ்தான் பறந்த தமிழக போலீஸ்.. திக்திக் ஆப்ரேஷன்!
சண்டிகர்: தீரன் பட ஸ்டைலில் தமிழ்நாட்டில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் ஒன்றின் தலைவனை தமிழ்நாடு போலீசார் ராஜஸ்தானில் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வந்தவர் தன்ராஜ் சவுத்திரி. இவருக்கு சொந்த ஊர் ராஜஸ்தான்.
நீண்ட காலத்திற்கு முன் மயிலாடுதுறைக்கு வந்தவர், இங்கே தங்கி வசித்து வந்தார். நகை விற்பனைக்காக அவர் தமிழ்நாட்டில் வந்து செட்டில் ஆனார்.

மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் இவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வந்தார். அதன்பின் நகை கடை ஒன்றும் திறந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் இவரின் வீட்டிற்கு மர்ம கும்பல் ஒன்று புகுந்து கொள்ளை அடிக்க முயன்றது. கடந்த ஜனவரி மாதம் இவரின் வீட்டிற்குள் நுழைந்த கும்பல் சவுத்திரியின் மனைவி ஆஷா மற்றும் அவரின் மகன் இருவரையும் கொடூரமாக கொன்றது. அப்போது சவுத்திரி வீட்டில் இல்லை.

கொலை
தீரன் படத்தில் வருவது போலவே முன் பக்க கதவுகளை உடைத்து இந்த கும்பல் வீட்டிற்குள் நுழைந்து உள்ளது. அதன்பின் சரமாரியாக வீட்டில் உள்ளவர்களை கம்பி, கத்தியால் தாக்கி உள்ளனர். தலையில் மோசமாக தாக்கி கொலை செய்துள்ளனர். அதன்பின் வீட்டில் இருந்த 12 பவுன் நகை, 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் வீட்டில் இருந்து எடுத்து சென்றனர். கடையில் இருந்து வீட்டிற்கு வந்த சவுத்திரி வீட்டில் குடும்பத்தினர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

கொள்ளை
இதையடுத்து உடனே அவர் போலீசுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில கொள்ளை வழக்குகளில் தொடர்பு உடைய வடஇந்திய கும்பல் இந்த கொள்ளையையும் செய்து இருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர். கொள்ளை நடந்த இடத்திற்கு அந்த நேரத்தில் வந்த கார், அதன் எண், மற்ற தடயங்கள் ஆகியவற்றை வைத்து இந்த கொள்ளையை செய்தது வடஇந்திய கும்பலாக இருக்கும் என்று உறுதி செய்யப்பட்டது.

தீரன்
அதன் அடிப்படையில் ராஜஸ்தானில் பதுங்கி இருந்த மணிப்பால் சிங் என்ற கொள்ளையனை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் மனிஷ் என்ற வடஇந்திய கொள்ளையன்தான் இந்த கொள்ளையை மேற்கொண்டது தெரிய வந்தது. அதற்கு முன் போலீசில் இருந்து தப்பிக்க முயன்ற மணிப்பால் சிங் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆனால் அதற்கு முன்பே இவரிடம் வாக்குமூலமும் வாங்கப்பட்டது.

ராஜஸ்தான்
இந்த நிலையில்தான் ராஜஸ்தானில் பதுங்கி இருந்த மனிஷை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கு கிடைத்த துப்பு அடிப்படையில் ராஜஸ்தான் சென்று அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இதற்காக ஒன்றரை வருடங்கள் ராஜஸ்தானில் போலீசார் சுற்றி திரிந்து உள்ளனர். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின் தீரன் பட பாணியில் இந்த வழக்கில் முதல் குற்றவாளி போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications