நிஜமான கேம் சேஞ்சர்.. ஹரியானாவில் களத்தில் இறங்கி.. வேலை பார்த்த ஆர்எஸ்எஸ்.. பாடம் கற்ற பாஜக!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானாவில் தற்போது பாஜக வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் சரிவை சந்தித்த பாஜக தற்போது மீண்டு வர தொடங்கி உள்ளது. அங்கே பாஜக கம்பேக் கொடுக்க ஆர்எஸ்எஸ் செய்த அரசியல் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காங்கிரஸ் 36 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 49 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காலை முதல் முன்னிலை வகித்த காங்கிரஸ் தற்போது பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் பாஜக முன்னிலையை சந்தித்து உள்ளது. அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வருகின்றன.

haryana assembly election results 2024

ஹரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கே மெஜாரிட்டி பெற 45 இடங்கள் தேவை. அங்கே பாஜக கம்பேக் கொடுக்க ஆர்எஸ்எஸ் அரசியல் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

லோக்சபா தேர்தல்: முன்னதாக லோக்சபா தேர்தல் சமயத்தில்.. ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக பலர் அதிருப்தியில் இருந்தனர். ஆர்எஸ் எஸ் அமைப்பில் இருந்து பாஜகவில் இணைந்த ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட தலைவர்களை மோடி ஒதுக்கி வருவதை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. அதனால்தான் கடந்த முறை ஆர்எஸ்எஸ் லோக்சபா தேர்தல் பணிகளை செய்யவில்லை. மோடியை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை, என்று செய்திகள் வந்தன.

ஆர்எஸ்எஸ் - பாஜக இடையே உரசல் நிலவுவதாக வரக்கூடிய செய்திகளுக்கு இடையேதான் பாஜக தலைவர் ஜேபி நட்டா, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து பாஜக கட்சி தனியாக சுதந்திரமாக வளர்ந்துள்ளதாகவும், இனி ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

பாஜகவின் தேசிய தலைவரே இப்படி நேரடியாக ஆர்எஸ்எஸ் பற்றி குறிப்பிட்டது தேசிய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியது. முக்கியமாக 2024 லோக்சபா தேர்தலுக்கு முன் இந்த பிரச்சனை நடந்ததுதான் விவாதத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் பாஜக சரிய.. அங்கே ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்யாததே காரணம். பத்தாண்டுகள் மத்தியில் பாஜகவும், உத்தரபிரதேசத்தில் ஏழு ஆண்டுகளும் ஆட்சியில் இருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசாங்கம் "அவர்களுடையது" என்ற போதிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பெரிய அளவில் பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்தே லோக்சபா தேர்தலில் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்பட்டது.. லோக்சபா தேர்தலில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பாஜகவில் மோடிக்கு எதிராகவே வேலை செய்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள். மோடிக்கு எதிராக திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள். மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு வேலை பார்க்கிறார்கள். பாஜகவில் சிறந்த தலைவர்.. மிக சிறந்த தலைவர் வாஜ்பாய். பாஜகவின் மிக மென்மையான தலைவர் அவர். அப்படி ஒரு தலைவரை பாஜகவில் பார்க்க முடியாது.

அவர் தன்னை முன்னிறுத்தியது இல்லை. ஆனால் மோடி தன்னை முன்னிறுத்துகிறார். இப்போதும் கூட அவர் தன்னை முன்னிறுத்துக்கொள்கிறார். பாஜகவிலேயே இதை பலரும் விரும்பவில்லை. மோடி தன்னை மட்டும் முன்னிறுத்துவதை பாஜகவிலேயே சிலர் விரும்பவில்லை. இதனால்தான் பாஜகவில் மோடிக்கு எதிராகவே வேலை செய்கிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் இதனால்தான் மோடிக்கு எதிராக அதிருப்தியில் இருக்கிறார்கள், என்றெல்லாம் கூறப்பட்டது.

ஹரியானா எழுச்சி: லோக்சபா தேர்தலில் பாஜக சரியவே இதுதான் காரணம் என்று கூறப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆர்எஸ்எஸ் தேர்தல் பணிகளை செய்தது. மாநில அளவில் பாஜக - ஆர்எஸ்எஸ் இடையே நிலவிய ஒருமைப்பாடு காரணமாக.,. ஆர்எஸ்எஸ் பாஜகவிற்காக தேர்தல் பணிகளை செய்ததாக கூறப்படுகிறது. அங்கே உள்ளூர் அளவில் இரண்டு தரப்பிற்கும் மோதல் இல்லை. நல்ல இணக்கம் இருந்தது.

முக்கியமாக உள்ளூர் அளவில் களப்பணிகளை, கிரவுன்டு வேலைகளை செய்ததாக கூறப்படுகிறது. இதுவே பாஜகவிற்கு சாதகமாக மாறி உள்ளது.. தேர்தல் களத்தில் கேம் சேஞ்சராக மாறியது என்றும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+