மறுவாழ்வு மையங்களில் "மனித வெடிகுண்டுகள்.." காலிஸ்தான் தீவிரவாதி போட்டிருந்த மாஸ்டர் பிளான்! பகீர்
காலிஸ்தான் தீவிரவாதி அம்ரித் பால் சிங் தனது அமைப்புகளுக்கு ஆட்களைச் சேர்த்த முறை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
சண்டிகர்: ஒட்டுமொத்த பஞ்சாப் போலீசாரும் இப்போது காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித் பால் சிங்கை தான் தேடி வருகின்றனர். இதற்கிடையே அவர் தனது அமைப்புகளுக்கு எப்படி ஆட்களைச் சேர்த்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைத் தனி நாடாகப் பிரித்து காலிஸ்தான் என்று அறிவிக்க வேண்டும் என்பதை அங்குள்ள பிரிவினைவாதிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக அவர்கள் தீவிரவாத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அப்படி'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பை நடத்தி வரும் அதன் தலைவரான அம்ரித் பால் சிங்தான் இப்போது பேசுபொருளாகியுள்ளார். அவரை கைது செய்யவே இப்போது ஒட்டுமொத்த பஞ்சாப் போலீசும் களமிறங்கியுள்ளது.

பஞ்சாப் போலீசார்
அவரது உதவியாளரைப் பஞ்சாப் போலீசார், கடந்த மாதம் கைது செய்த நிலையில், அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் போலீஸ் நிலையத்தையே முற்றுகையிட்டு அதிர்ச்சியளித்தார். அப்போது அவரது உதவியாளரை விடுவித்தாலும் கூட அம்ரித் சிங் நடவடிக்கைகளை அதன் பிறகு பஞ்சாப் போலீசார் கண்காணித்து வந்தனர். இதையடுத்து அவரை கைது செய்ய அதிரடி ஆப்ரேஷனை பஞ்சாப் போலீசார் நேற்று முன்தினம் எடுத்தனர். இதற்காகச் சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில், மத்தியிலும் உதவி கோரப்பட்டிருந்தது.

இணைய சேவை துண்டிப்பு
இதனால் அங்கு இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது வரை அம்ரித் சிங்கை பஞ்சாப் போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. இருப்பினும், அவரது பாதுகாவலர் உள்ளிட்ட வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பைச் சேர்ந்த 78 பேரை போலீசார் கைது செய்தனர். அம்ரித் சிங் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அவரது உறவினர் மற்றும் டிரைவர் தானாக முன்வந்து இப்போது போலீஸில் சரண்டராகியுள்ளனர்.

ஆள்சேர்ப்பு
இப்போது ஒட்டுமொத்த பஞ்சாப் போலீசும் அம்ரித் பால் சிங்கை தேடி வரும் நிலையில், அவர் தனது அமைப்புகளுக்கு எப்படி ஆட்களைச் சேர்த்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. போதைப் பொருள் மறுவாழ்வு மையங்களைக் குறிவைக்கும் அம்ரித் பால் சிங், அங்குள்ள இளைஞர்களைத் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்த தேர்ந்தெடுப்பதாக உளவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் குருத்வாராக்களையும் ஆயுதங்களைப் பதுக்கவும் நாச வேலைகளுக்கு ஆட்களை எடுக்கவும் பயன்படுத்தியதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

துபாய்
கடந்தாண்டு துபாய் சென்ற அம்ரித் சிங், அங்கே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பினர் மற்றும் வெளிநாட்டில் இருக்கும் காலிஸ்தான் ஆதரவாளர்களைச் சந்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் உத்தரவின் பெயரிலேயே இளைஞர்களை மூளைச்சலவை செய்து மனித வெடிகுண்டுகளாக மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார் என்பதையும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. அம்ரித் சிங்கை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

வெடிமருந்துகள்
நமது அண்டை நாடான பாகிஸ்தான் இப்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்களே அந்நாட்டு அரசின் மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் மக்களைத் திசைதிருப்ப அம்ரித்பால் சிங் போன்ற பிரிவினைவாதிகளைப் பாகிஸ்தானே இந்தியாவிற்குள் அனுப்புகிறது. அம்ரித்பால் சிங்கை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர் உருவாக்கியுள்ள ஆனந்த்பூர் கல்சா முன்னணி (ஏகேஎஃப்) என்ற அமைப்பிற்காக வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

போதை ஒழிப்பு மையங்கள்
மேலும், அந்த அமைப்பிற்கு வைத்திருந்த சீருடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சீக்கிய மத போதகர் ஒருவர் காரில் இருந்து இந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த காரில் "ஏகேஎஃப்" என எழுதப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். வாரிஸ் பஞ்சாப் தே அமைப்பு பஞ்சாபில் பல போதை ஒழிப்பு மையங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த மையங்களில் தான் அவர்கள் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தனர்.

எப்படி
போதை ஒழிப்பு மையங்களில் சேர்க்கப்படும் இளைஞர்களைத் துப்பாக்கி கலாச்சாரத்தை நோக்கித் தள்ளுவது இவர்களின் குறிக்கோளாகும். அவர்களிடம் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கை கொன்ற பயங்கரவாதி திலாவர் சிங்கின் பாதையில் பயணிக்க வேண்டும் என்று அம்ரித் சிங் மூளைச்சலவை செய்வாராம். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளைத் தியாகிகள் என்று சொல்லி மூளைச்சலவை செய்யும் அம்ரித் சிங், இளைஞர்களையும் துப்பாக்கி கலாச்சாரத்தை நோக்கித் தள்ளுவார். அமிர்தசரஸில் ஒரு குருத்வாரா நடத்தும் பல போதை மறுவாழ்வு மையங்களில் அவர் இதுபோல ஆயுதங்களைப் பதுக்கி வைத்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications