21 வயசுதான்.. ஏகப்பட்ட ஆண் சகவாசம்.. ஓயாமல் செல்போனில் கொஞ்சல்.. கடுப்பான கணவர்.. ஷாக் சம்பவம்!
சண்டிகர்: வெறும் 21 வயசுதான்.. ஆனால் ஏகப்பட்ட ஆண் நண்பர்களுடன் மனைவிக்கு தொடர்பு இருந்ததாம்.. ஓயாமல் அவர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்... இதனால் ஆத்திரம் தாங்காத கணவன், அந்த செல்போன் ஒயராலேயே மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் வசித்து வந்த தம்பதி பைசன் - ஷப் நகூர். இவர்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம்தான் ஆகிறது.
ஆனால் கல்யாணத்துக்கு முன்பே ஷப் நகூருக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள்.. அவர்களுடன் திருமணத்துக் பிறகும் தொடர்பில் இருந்து வந்துள்ளாராம்.. பலமுறை எப்ப பார்த்தாலும் அந்த ஆண் நண்பர்களுடன் போனிலும் பேசி வந்துள்ளார். இதை கணவன் கவனித்துவிட்டு ஷப் நகூரை எச்சரித்துள்ளார்.

நான்-வெஜ் சாப்பாடு
ஆனாலும் ஷப் நகூர் அவர் பேச்சை கேட்கவில்லை-.. இதனால் இந்த ஒரு வருடமாகவே தம்பதிக்குள் தகராறு நிறைய வந்து போயுள்ளது. அது மட்டுமல்ல, ஷப் நகூர் குடும்பம் ரொம்ப ஏழ்மையானது.. வீட்டில் வெறும் சாதாரண, சைவ சாப்பாடுதான்.. ஆனால் கல்யாணம் ஆனதில் இருந்து நிறைய நான்-வெஜ் சாப்பாடு வேண்டும் என்று கேட்டு தொல்லை பண்ணி வந்துள்ளார்.

கிப்ட் எங்கே?
இந்நிலையில், முதலாம் ஆண்டு கல்யாண நாள் வந்தது.. அப்போது கணவனிடம், "எனக்கு எதுவும் கிஃப்ட் வாங்கி தரலையா" என்று கேட்டார். ஏற்கனவே ஆத்திரத்திலும், கடுப்பிலும் இருந்த கணவனுக்கு இது மேலும் எரிச்சலை தரவும், மீண்டும் தகராறு ஆரம்பித்துள்ளது.

தற்கொலை
ஒரு கட்டத்தில் ஆவேசம் அடைந்த கணவன் செல்போன் சார்ஜர் ஒயரால் மனைவியின் கழுத்தை நெரித்தார்.. இதில் மனைவி துடிதுடித்து இறந்துவிட்டார். இதற்கு பிறகு வெளியில் வேகவேகமாக சென்ற கணவன், ஒரு ரயிலில் ஏறிகொண்டார்.. சிறிது நேரத்தில் ஓடிக் கொண்டிருந்த ரயிலில் இருந்து திடீரென குதித்து தற்கொலையும் செய்து கொண்டார்.

விசாரணை
தகவலறிந்து வந்த போலீசார், இரு வேறு இடங்களில் இருந்த கணவன் - மனைவி உடல்களை கைப்பற்றினர்.. குடும்ப தகராறில்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக பைசனின் குடும்பத்தினர் போலீசில் தெரிவித்ததையடுத்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications