Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூள் தூளாகுதே பாஜக கணக்கு? விட்டதை பிடிக்குதா காங்கிரஸ்? ஹரியானாவில் ரிசல்ட் வேற மாதிரி வரும் போலயே

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கான சூழல் எழுந்துள்ளதாக, இன்றைய எக்ஸிட் போல் முடிவுகள் காட்டுகின்றன.. இதற்கு என்ன காரணம்? பாஜகவை சமாளிக்க வேண்டிய நெருக்கடி காங்கிரஸுக்கு ஹரியானாவில் ஏன் ஏற்பட்டது?

ஹரியானாவில் 2 முறை ஆட்சியை பிடித்த பாஜக, மூன்றாவது முறையும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டியிருக்கிறது.. ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக் தள்-பகுஜன் சமாஜ் கூட்டணி கட்சிகள் உள்ளிட்டவை இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கின்றன என்றாலும், பாஜக VS காங்கிரஸ் கட்சிக்குள்தான் நேரடி போட்டி நடந்துள்ளதாக தெரிகிறது.

Is Congress forming a government in Haryana and What are the dissatisfaction with 10 years of BJP rule Exit Poll

எனவேதான், விட்டதை இந்த முறையாவது பிடிக்க வேண்டுமே என்ற முயற்சியை, காங்கிரஸ் மேலிடம் கையில் எடுத்தது.. 2 முறை பாஜகவின் ஆட்சி நடந்தால், ஏராளமான அதிருப்திகளை அக்கட்சி சம்பாதிக்க நேர்ந்தது.

அதிருப்திகள்:
இந்த அதிருப்திகளைதான், தங்களுக்கான வாக்குகளாக மாற்ற காங்கிரஸ் முனைப்பு காட்ட துவங்கியது. அத்துடன், எம்பி தேர்தலில் கிடைத்த கூடுதல் தொகுதிகளால் ஹரியானாவில் எழுச்சியும் ஓரளவு கிடைத்தது.

ஆக, ஒருபக்கம் பாஜக அதிருப்தி + மறுபக்கம் எம்பி தேர்தல் எழுச்சி என இரு வகையான பலத்துடன் காங்கிரஸ் தேர்தல் வேலைகளில் இறங்கி அடித்தது.. இதற்குபிறகுதான், காங்கிரஸின் தீவிரத்தை உணர்ந்த பாஜக, எம்பி தேர்தலின்போது, மனோகர் லால் கட்டாரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, நயாப் சிங் சைனியை அவசர அவசரமாக நியமித்தது.. இவர்தான் இப்போது முதல்வர் வேட்பாளராகவும் உள்ளார்..

வாக்குகள்: எப்படி பார்த்தாலும் பலம் பொருந்திய பாஜகவை சமாளிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு இந்த தேர்தலிலும் ஏற்படவே செய்துள்ளது.. அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் வாக்குகளை பிரிக்க இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துவிட்டன.. இதைத்தவிர, துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி, ஆம் ஆத்மி போன்றவையும் தனித்து போட்டியிட்டுள்ளனர்.. இதைத்தவிர, பலமிக்க சுயேச்சைகளும் சிலர் களமிறங்கிவிட்டார்கள்.

10 வருடம் கழித்தாவது ஆட்சியை பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வந்துள்ளநிலையில், தன்னுடைய வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ளிவிட வேண்டும் என்ற கட்டாயமும் காங்கிரசுக்கு வந்துள்ளது.

ஊழல்கள்: போதாக்குறைக்கு, ஊழல் புகார்களை முன்னிறுத்தி, பாஜக மேற்கொண்ட பிரச்சாரங்களையும் எதிர்கொள்ள வேண்டிய சங்கடமும், அவசியமும் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது..

எனினும், ஜாட் சமூகத்தினர் அதிகமுள்ள மாநிலம் என்பதால், இவர்களுக்கான ஒதுக்கீடு, விவசாயிகள் கோரிக்கைகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாதை திட்டம் போன்றவை தலைதூக்கியிருப்பதால், இவைகளையே தன்னுடைய ஒரே ஆயுதமாக கொண்டு, களம் கண்டுள்ளது காங்கிரஸ். அத்துடன் ராகுல்காந்தியின் பிரச்சாரமும், அம்மாநில மக்களிடம் வீரியத்துடன் சென்றடைந்ததை மறுக்க முடியாது.

அக்னிவீர்: குறிப்பாக, "ஹரியானாவின் சுயமரியாதையை பாஜக பறித்தது" என்று ராகுல் பிரச்சாரத்தில் முழக்கமிட்டிருந்ததை பாஜகவுக்கு எரிச்சலை அள்ளி கொட்டியது.

"தேசபக்தியுள்ள இளைஞர்களின் விருப்பங்களை அக்னிவீர் திட்டம் பறித்தது, கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளின் உரிமைகளை பறிக்க முயன்றது என எண்ணற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தியும் பிரச்சாரங்களில் முன்னெடுத்திருந்தது ஓரளவு சாதகமான வெற்றியை தேர்தல் முடிவில் பெற்றுத்தரும் என்றும் காங்கிரஸ் நம்புகிறது.

காங்கிரஸின் இந்த நம்பிக்கைகள் அனைத்துமே இன்று வீண் போகவில்லை என்றே தெரிகிறது.. தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. பெரும்பாலான கருத்து கணிப்புகள், பாஜக படு தோல்வி அடையும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றே தெரிவித்து வருகின்றன. இவையெல்லாம் ஒருவகையான கணிப்புகள் என்றாலும், வாக்கு எண்ணிக்கையின்போதே நிஜ நிலவரம் தெரியவரும்.

முடிவு என்ன: அதேசமயம், இந்த எக்ஸிட் போல் முடிவுகளையும், எளிதாக எடுத்துக் கொண்டு கடந்துவிட முடியாது.. காரணம், இதுவரை நடந்த தேர்தல்களின் எக்ஸிட் போல்களை எடுத்துக் கொண்டால், பெரும்பாலான கணிப்புகள் பாஜகவுக்கே சாதகமாக அமைந்திருக்கின்றன.. ஆனால், ஹரியானா தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கணிப்புகள் வெளியாகி வருவது, தாமரை கட்சிக்கு கலக்கத்தையும், கதர் கட்சிக்கு பெருத்த நம்பிக்கையையும் தந்து கொண்டிருக்கிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+