பஞ்சாப்பில் கவிழும் ஆம்ஆத்மி ஆட்சி? பாஜகவில் சேர்ந்த ராகவ் சத்தா கையில் 63 எம்எல்ஏக்கள்! ஷாக்
சண்டிகர்: ஆம்ஆத்மி கட்சியில் இருந்து ராஜ்யசபா எம்பி ராகவ் சத்தா நேற்று பாஜகவில் இணைந்தார். அவர் பஞ்சாப்பில் இருந்து ராஜ்யசபாவுக்கு எம்பியாக தேர்வாகி இருந்தார். இந்நிலையில் தான் ராகவ் சத்தா உடன் பஞ்சாப்பில் உள்ள ஆம்ஆத்மி கட்சியின் 63 எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பஞ்சாப்பில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மானின் அரசு கவிழ்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியில் இளம் தலைவராக இருந்தவர் ராகவ் சத்தா. இவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வலதுகரமாக அறியப்பட்டவர். ராஜ்யசபா எம்பியாக இருந்தார். அதுமட்டுமின்றி ராஜ்யசபாவில் ஆம்ஆத்மி எம்பிக்கள் குழுவின் துணை தலைவராக இருந்தார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்பிக்கள் குழுவின் துணை தலைவர் பொறுப்பில் இருந்து அவரை அரவிந்த் கெஜ்ரிவால் நீக்கினார். இதனால் ராகவ் சத்தா அதிருப்தியடைந்தார்.
ஆம்ஆத்மியில் விலகிய ராகவ் சத்தா
இந்நிலையில் தான் தான் திடீரென்று அவர் நேற்று ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி விலகிய கையோடு பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். அவருடன் ஆம்ஆத்மியின் சந்தீப் பதக், அசோக் மிட்டல் என்ற 2 ராஜ்யசபா எம்பிக்களும் பாஜகவில் சேர்ந்தனர்.
இதுதவிர முன்னாள் கிரிக்கெட் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ராஜிந்தர் குப்தா, விக்ரம் சானே, ஸ்வாதி மாலிவால் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஸ்வாதி மாலிவால் மட்டும் டெல்லியில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வானவர். மற்ற 6 பேரும் பஞ்சாப்பில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்வானவர்கள் ஆவார்கள்.
பஞ்சாப்பில் கவிழும் ஆம்ஆத்மி ஆட்சி?
இந்நிலையில் தான் பஞ்சாப்பில் நடக்கும் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி கலைகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமாகி உள்ள ராகவ் சத்தாவுடன் பஞ்சாப்பை சேர்ந்த 63 எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளதாக கூறபப்டுகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முதல்வர் பகவந்த் மானுக்கு எதிராக திரும்பினால் பஞ்சாப்பில் ஆட்சி கலைந்து விடும்.
இந்த 63 எம்எல்ஏக்களில் 48 பேர் அவருடன் உறுதியாக உள்ள நிலையில் 15 பேர் தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்களிடம் இருந்து முழுமையாக ஆதரவு பெற ராகவ் சத்தா முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்ததாக பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி கவிழ்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பஞ்சாப்பில் கடந்த 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி வென்று ஆட்சியை பிடித்தது. அதன் பதவிக்காலம் 2027-ம் ஆண்டு வரை தொடக்கம் வரை அங்கு ஆம்ஆத்மியின் ஆட்சி உள்ளது. ஆனால் 63 எம்எல்ஏக்களும் ராகவ் சத்தாவுக்கு ஆதரவளித்து ராஜினாமா செய்தால் முதல்வர் பகவந்த் மான் ஆட்சி கவிழும்.
பஞ்சாப்பில் ராகவ் சத்தா செல்வாக்கு
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பாஜகவில் சேர்ந்துள்ள ராகவ் சத்தாவிற்கும், பஞ்சாப் எம்எல்ஏக்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புரியும்படி கூற வேண்டும் என்றால் கடந்த 2020ல் பஞ்சாப் மாநிலத்தின் ஆம்ஆத்மி கட்சியின் துணை பொறுப்பாளராக ராகவ் சத்தா நியமனம் செய்யப்பட்டார். 2022ம் ஆண்டின் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்த நியமனத்தை அரவிந்த் கெஜ்ரிவால் செய்தார். ராகவ் சத்தா தீவிரமாக பணியாற்றினார்.
வேட்பாளர் தேர்வு, பிரசாரம், தேர்தல் அறிக்கை என்று பல்வேறு விஷயங்களில் ராகவ் சத்தா தீவிரமாக செயல்பட்டார். இதையடுத்து தான் 2022ல் பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. அதன்பிறகு 2022ம் ஆண்டிலேயே ராகவ் சத்தா பஞ்சாப்பில் இருந்து ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார். இதனால் ராகுல் சத்தாவிற்கு, பஞ்சாப் ஆம்ஆத்மி எம்எல்ஏக்களிடம் செல்வாக்கு உள்ளது.
2022 தேர்தலில் என்ன நடந்தது?
பஞ்சாப்பில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 59 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். கடந்த 2022ம் ஆண்டில் பஞ்சாப்பில் சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அரியணையில் ஏறியது. ஆம்ஆத்மி கட்சி மொத்தம் 92 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், எஸ்ஏடி 3 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.
அதன்பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆம்ஆத்மி கட்சி 2 தொகுதிகளை ஆம்ஆத்மியிடம் பறிகொடுத்தது. இதனால் மொத்தமுள்ள 119 சட்டசபை தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 92ல் இருந்து 94 ஆக அதிகரித்தது. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 16 எம்எல்ஏக்களாக குறைந்தது. எஸ்ஏடி கட்சிக்கு 3 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், சுயேச்சையாக ஒரு எம்எல்ஏவும் உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications