இடஒதுக்கீடு அறிவித்தும் ஜம்முவில் ஒரு ST தொகுதியில் கூட பாஜகவால் ஜெயிக்க முடியலையே- டெல்லி ஷாக்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு கவுரவமான வெற்றியைக் கொடுத்திருப்பது ஜம்மு பிராந்தியம்தான். ஜம்மு பிராந்தியத்தில் 7 தலித்துகளுக்கான தனித் தொகுதிகளை (SC Seats) கைப்பற்றிய பாஜகாவால் 6 பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகளில் (ST seats) ஒன்றில் கூட வெல்ல முடியாமல் போயிருப்பது டெல்லி மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம். இத்தனைக்கும் ஜம்மு பிராந்தியத்தில் பெரும்பான்மையினரான பஹாரிகளுக்கு இடஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு அறிவித்தும் வாக்குகள் கிடைக்காமல் போனது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது,
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பாஜகவுக்கு 29 இடங்கள் கிடைத்திருப்பது கவுரவமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

பாஜகவுக்கு கிடைத்த 29 இடங்களும் இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஜம்மு பிராந்தியத்தில் மட்டும்தான். முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
ஜம்மு பிராந்தியத்தில் தலித்துகளுக்கான தனித் தொகுதிகள் 7 உள்ளன. பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகள் 6 உள்ளன. இவற்றில் அனைத்து தலித் தொகுதிகளிலும் பாஜக வெற்றி வாகை சூடியிருக்கிறது. ஆனால் 6 பழங்குடிகளுக்கான தனித் தொகுதிகளில் ஒன்றில் கூட பாஜக வெல்ல முடியவில்லை.
இத்தனைக்கும் பழங்குடிகளை அரவணைப்பதற்காக பகீரத முயற்சிகளை மேற்கொண்டது பாஜக. தொகுதி மறுசீரமைப்பில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் பழங்குடிகளுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்க புதிய தொகுதிகளை உருவாக்கியது. கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் ஜம்மு பிராந்தியத்தில் பெரும்பான்மையினராக உள்ள சமூகங்களான பஹாரி, பதரி,கோலி மற்றும் கடா பிராமணர்களையும் பழங்குடிகள் பட்டியலில் சேர்த்து 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய பாஜக அரசு சட்ட திருத்தம் நிறைவேற்றியது. அத்துடன், தற்போதுள்ள குஜ்ஜார் மற்றும் பகர்வால்கள் போன்ற பழங்குடியின சமூகங்களுக்குக் கிடைக்கும் இடஒதுக்கீட்டில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர்களுக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைக்கும் என்றெல்லாம் தாஜா செய்து பார்த்தது மத்திய பாஜக அரசு. இப்படி இடஒதுக்கீடு கொடுத்தும் ஜம்முவின் பழங்குடிகளின் 6 தொகுதிகளில் ஒன்றைக் கூட பாஜக பெற முடியாமல் போயிருப்பதுதான் கட்சி மேலிடத்தை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
அதே நேரத்தில் ஜம்மு பிராந்தியத்தில் மத்திய பாஜக அரசு உருவாக்கிய 6 புதிய தொகுதிகளில் 5-ல் வென்றுள்ளது. இந்துக்களின் வைஷ்ணவ தேவி கோவில் உள்ளிட்ட புனித தலங்கள் அமைந்துள்ள 5 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றியும் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications