"என் மகனை கண் முன்னாடியே சுட்டு கொன்னுட்டாங்க!" கதறிய ஐஏஎஸ் அதிகாரி.. விஜிலென்ஸ் ரெய்டில் பரபரப்பு
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டில் நடந்த சோதனையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணி புரிந்து வந்தவர் சஞ்சய் போப்லி. இவர் பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹரில் கழிவுநீர் குழாய் பதிக்கும் டெண்டர் வழங்க லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
டெண்டர் எடுக்க விரும்பும் ஒப்பந்ததாரர் தனக்கு லஞ்சம் கொடுத்தால் மட்டுமே டெண்டரை கொடுப்பேன் என்று கூறி உள்ளார்.

ரெய்டு
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி கடந்த ஜூன் 20ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அதிகாரியின் வீட்டில் விஜிலென்ஸ் குழு நேற்றைய தினம் சஞ்சய் போப்லி வீட்டில் சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் பல கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், பணம், மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

கொலை
விஜிலென்ஸ் குழுவின் சோதனை நடைபெற்று வந்த நிலையில், அப்போது சஞ்சய் போப்லியின் மகன் சண்டிகரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். 27 வயதான சஞ்சய் போப்லியின் மகன் கார்த்திக் போப்லி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறினர். இருப்பினும், அவரது தந்தை, தனது மகன் கொலை செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில், "எனது கண்முன்னே என் மகன் கொல்லப்பட்டான். என் மகனின் மரணத்திற்கு நானே சாட்சி" என்றார். சோதனைக்கு வந்த அதிகாரிகளால் தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

போலீஸ் தரப்பு
இருப்பினும், இதை போலீஸ் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. விஜிலென்ஸ் குழு சோதனை நடத்திக் கொண்டு இருக்கும் போது, அவரது மகன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தந்தையின் துப்பாக்கியைக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

பரபரப்பு
இது குறித்துத் தெளிவான தகவல் இல்லாத நிலையில், அக்கம் பக்கத்தினரும் கூட விஜிலென்ஸ் குழு உள்ளே இருந்த போது தான் சத்தம் கேட்டது என்றும் இருப்பினும் உள்ளே என்ன நடந்தது என தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வலியுறுத்தல்
இது குறித்து கைது செய்யப்பட்ட அதிகாரியின் மனைவி கூறுகையில், "விஜிலென்ஸ் அதிகாரிகள் வழக்கில் அவர்களுக்குச் சாதகமாக இருக்கும்படி வாக்குமூலம் கொடுக்கும்படி எங்களை வற்புறுத்தினர். இதற்காக அவர்கள் எனது வீட்டுப் பணிப்பெண்ணையும் சித்திரவதை செய்தனர். என் 27 வயது மகன் போய்விட்டான். அவன் ஒரு சிறந்த வழக்கறிஞராக இருந்தான். அவனைக் கொன்றுவிட்டனர். பொய் வழக்கிற்காக எனது மகனைக் கொன்றுவிட்டனர்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications