‛‛14 தொகுதிகளில் தனித்து தான் போட்டி’’.. காங்கிரசுடன் கூட்டணியில்லை.. உறுதியாக சொன்ன கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட பஞ்சாப் மாநிலம் மற்றும் சண்டிகர் நாடாளுமன்ற தொகுதிகளில் தனித்து தான் போட்டியிடுவதாக ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாக கூறி காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றியை தடுக்கும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. மொத்தம் 28 கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் இருந்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வெளியேறி உள்ள நிலையில் காங்கிரஸ், ஆம்ஆத்மி, திமுக உள்பட 27 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

Loksabha Election 2024: Arvind Kejriwal says that no alliance with the INDIA bloc in punjab and Chandigarh

இருப்பினும் கூட ‛இந்தியா' கூட்டணியில் குழப்பம் என்பது நிலவி வருகிறது. அதாவது ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை எனவும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

அதேபோல் ‛ஆம்ஆத்மி' கட்சி ‛இந்தியா' கூட்டணியில் இருந்தாலும் கூட பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இன்றி தனித்து களமிறங்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பஞ்சாப் ஆம்ஆத்மி முதல்வரான பகவந்த் மான் அறிவிப்பு செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்காமல் இருக்க அந்த கட்சியில் உள்ள உள்ளூர் தலைவர்கள் தான் காரணம்.

இந்நிலையில் தான் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சயளிக்கும் வகையில் ஆம்ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் திட்ட விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‛‛இன்னும் இரண்டு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப்பில் உள்ள 13 நாடாளுமன்ற தொகதி மற்றும் சண்டிகர் நாடாளுமன்ற தொகுதி என மொத்தம் 14 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி தனித்து தான் போட்டியிட உள்ளது. அடுத்த 10-15 நாட்களில் ஆம் ஆத்மி கட்சி இந்த 14 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவிக்கும். இந்த 14 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இங்கு ‛இந்தியா' கூட்டணி என்பது இல்லை'' என்றார்.

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் மட்டுமே பேசி வந்த நிலையில் அதனை இன்றைய பேச்சின் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த விழாவில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பேசுகையில், ‛‛எங்களின் கைகளை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். எவ்வளவு வலிமைப்படுத்துகிறீர்களோ, அதற்கேற்ப நாங்கள் உங்களுக்காக உழைப்போம். 2 ஆண்டுக்கு முன்பு பஞ்சாப்பில் 117 சட்டசபை தொகுதிகளில் 92 இடங்களை வெற்றி பெற வைத்து எங்களை ஆசீர்வாதம் செய்தீர்கள். அதேபோல் நீங்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்'' என்றார்.

ஆம்ஆத்மியின் இந்த அறிவிப்பு என்பது பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலாக அமைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் இருந்தது. அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. 117 தொகுதிகளில் 92 இடங்களில் ஆம்ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மேலும் இப்போது பஞ்சாப்பில் ஆம்ஆத்மி இன்னும் பலமாக வளர்ந்துள்ளது. இத்தகைய வளர்ச்சி என்பது காங்கிரஸ் கட்சிக்கு சிக்கலாக உள்ளது. இதற்கிடையே தான் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை ஆம்ஆத்மி பஞ்சாப்பில் தனித்து விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+