வில்லங்கம் தந்த இரவு விருந்து.. தொழிலதிபர் மனைவியை "வழியனுப்பி" வைத்த அரசியல்வாதி.. யாரிந்த பெண்?
சண்டிகர்: ஆம் ஆத்மி பிரமுகர் செய்த காரியம், பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான நடவடிக்கையை போலீசார் உடனடியாக கையில் எடுத்து வரும் நிலையில், விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
பஞ்சாப்பை சேர்ந்தவர் அனோக் மிட்டல்.. இவருக்கு 35 வயதாகிறது.. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியின் உள்ளூர் தலைவராக இருக்கிறார்.. இவருடைய மனைவி பெயர் மனைவி லிப்சி மிட்டல்... மிகப்பெரிய பெண் தொழிலதிபர் ஆவார்.. இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு, தேலோ நகருக்கு மனைவியை டின்னருக்கு அழைத்து சென்றார் அனோக்.. ஒரு ஓட்டலுக்கு சென்று இரவு விருந்து சாப்பிட்டு முடித்துவிட்டு, காரில் தம்பதி இருவரும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்..
இரவு விருந்து
அப்போது, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்லி காரை சாலையோரத்தில் நிறுத்தியிருக்கிறார் அனோக்.. அந்த நேரத்தில், 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் வந்து அனோக்கை தாக்கியுள்ளது. அத்துடன் காருக்குள்ளிருந்த லிப்சியையும் தாக்கியது. இதில் லிப்சி கொல்லப்பட்டார்.
சுயநினைவு திரும்பி அனோக் எழுந்து பார்த்தபோது, லிப்சி சடலமாகி கிடப்பதுடன், அவருடைய நகைகளும் திருடப்பட்டிருப்பதை கண்டார். அத்துடன், இவர்கள் வந்த காரும் காணாமல் போயிருந்தது.. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகின..
கள்ளக்காதலியின் பலே பிளான்
அதாவது, அனோக் மிட்டலுக்கு, 24 வயதுடைய இளம்பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது.. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.. தன்னுடைய கணவரின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டதை கவனித்த லிப்சி, தொடர்ந்து அவரை கண்காணித்ததில், கணவனுக்கு கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது..
மனைவிக்கு தன்னுடைய கள்ளக்காதல் விஷயம் தெரிந்துவிட்டதால், அவரை கொலை செய்ய முடிவெடுத்தார் அனோக்.. இதற்காக காதலியுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டினார்.. இதற்காக, கூலிப்படை ஒன்றை நியமித்தார்.. இந்த கூலிப்படையை பேசி ஏற்பாடு செய்தது, 24 வயது காதலிதானாம்..
இதுகுறித்து காவல் ஆணையாளர் குல்தீப்சிங் சாஹல் சொல்லும்போது, "இந்த சம்பவத்தில் சதி திட்டம் தீட்டிய முக்கிய நபராக அந்த பெண்ணின் கணவர் இருக்கிறார். கூலிப்படையினருக்கு ரூ.2.5 லட்சம் பணம் தரப்படும் என பேசப்பட்டு, இதற்காக ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்திருக்கிறார்" என்றார்.
தலைமறைவாக உள்ள முக்கிய புள்ளி
தற்போது, அனோக்கின் காதலி, கூலிப்படையை சேர்ந்த அம்ரித்பால் சிங் என்ற பல்லி (வயது 26), குர்தீப் சிங் என்ற மன்னி (வயது 25), சோனு சிங் (வயது 24) மற்றும் சாகர்தீப் சிங் என்ற தேஜி (வயது 30) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கூலிப்படையின் முக்கிய தலைவனான குர்பிரீத் சிங் என்ற கோபி தலைமறைவாக இருப்பதால், அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
ஆம் ஆத்மி எம்எல்ஏவான அசோக் பராஷர் பப்பி, கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் அனோக்கை கட்சியில் சேர்த்திருக்கிறார். அதற்குள் கள்ளக்காதலியுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து மனைவியை கொலை செய்த வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு போய்விட்டார். இந்த சம்பவம் ஆம் ஆத்மி கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications