பயங்கரவாதிகளை எதிர்க்க துணிவு இல்லை.. பஹல்காமில் கணவன்களை இழந்த பெண்கள் பற்றி பாஜக எம்பி சர்ச்சை
சண்டிகர்: ‛‛பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பெண்கள் வீரமாக பயங்கரவாதிகளை எதிர்க்கவில்லை. இதனால் தான் கணவன்களை இழந்துள்ளனர். அதேபோல் இறந்தவர்கள் அக்னிவீர் திட்டத்தில் பயிற்சி பெற்றிருந்தால் இறப்பு என்பது குறைந்து இருக்கும்'' என்று பாஜக ராஜ்யசபா எம்பி ராம் சந்தர் ஜங்க்ரா பேசியது சர்ச்சையாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள் ஆவார்கள். பயங்கரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து சுட்டு கொன்றனர்.

சுற்றுலா பயணிகள் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சியும் கூட பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். மேலும் கணவன்களை இழந்த பெண்கள் துயரம் தாங்காமல் தங்களையும் கண்ணீர் மல்க சுட்டு கொல்லும்படி பயங்கரவாதிகளிடம் கூறினர். அதற்கு பயங்கரவாதிகள் மோடியிடம் போய் சொல் என்று கூறினர்.
இந்த கொடூர தாக்குதலுக்கு ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு தான் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் என்பது நம் நாட்டின் ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் துயரமாக பதிவாகி உள்ளது. இந்நிலையில் தான் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்கள் பற்றியும் அவர்களின் மனைவிகள் பற்றியும் ஹரியானா பாஜகவின் ராஜ்யசபா எம்பி ராம் சந்தர் ஜங்க்ரா கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் பீவாணி என்ற இடத்தில் அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பாஜக எம்பி ராம் சந்தர் ஜங்க்ரா கூறியதாவது: பஹல்காம் தாக்குதலில் பலியானவர்கள் அக்னிவீர் திட்டத்தின்கீழ் பயிற்சி எடுத்து இருந்தால் இறப்பு எண்ணிக்கை குறைந்து இருக்கும். அதேபோல் கணவரை இழந்த பெண்கள் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிடுவதற்கான உறுதி நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இதனால் அவர்கள் கணவர்களை இழந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு இருந்தால் பலி எண்ணிக்கை குறைந்திருக்கும். மக்களை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பயங்கரவாதிகள் வந்துள்ளனர். அப்படி இருக்கும்போது அவர்கள் இரக்கம் காட்டமாட்டார்கள். மக்கள் கெஞ்சியதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் கொன்றுள்ளனர். இதனால் கையெடுத்து கும்பிட்டபடி நம் மக்கள் இறந்துள்ளனர். நம் நாட்டின் சுற்றுலா பயணிகள் அக்னிவீர் திட்டத்தில் பயிற்சி எடுத்து இருந்தால் இறந்திருக்க மோட்டார்கள். ராணி அஹில்யாபாய் போன்ற நமது சகோதரிகளிடம் துணிச்சலுக்கான உணர்வை மீண்டும் தூண்ட வேண்டும்'' என்று கூறியுள்ளார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications