சண்டிகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்காவிட்டால் அபராதம்...மக்களை மிரட்டும் பஞ்சாயத்துக்கள்

Google Oneindia Tamil News

சண்டிகர் : விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என கிராம மக்களை பஞ்சாப் பஞ்சாயத்து நிர்வாகிகள் மிரட்டி உள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் போராட துவங்கி, நேற்றுடன் 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் எனவும், அப்படி பங்கேற்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கிராம மக்களை பஎ்சாயத்து நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

 Participate in farmers protests or pay fine, Punjab panchayats tell households

மேலும் சில பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் டெல்லி எல்கலையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். அப்படி பங்கேற்காதவர்கள் கட்டாயம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 1 ம்தேதி பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை துவக்கினர். முதலில் ரயிலை மறித்து ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தை துவக்கியவர்கள், பிறகு கடைகளை அடைத்தும், வணிகர்களின் ஆதரவை திரட்டியும் போராட துவக்கினர்.

ரயிலில் வந்த 1,000 பஞ்சாப் விவசாயிகள்... டெல்லிக்குள் செல்லாமல் மும்பை நோக்கி சென்றதால் பரபரப்பு! ரயிலில் வந்த 1,000 பஞ்சாப் விவசாயிகள்... டெல்லிக்குள் செல்லாமல் மும்பை நோக்கி சென்றதால் பரபரப்பு!

தற்போது விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருவதால், கிராம மக்களின் ஆதரவையும் திரட்ட முடிவு செய்து பஞ்சாயத்து நிர்வாகிகள் மூலம் மக்களை கட்டயமாக போராட்டத்தில் களமிறக்கி வருகின்றனர்.

English summary
Participate in farmers' protests or pay fine, Punjab panchayats tell households
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X