அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்: பஞ்சாப், உ.பி.யில் இன்று பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்
சண்டிகர்/லக்னோ: பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவும் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 58, 2-வது கட்டமாக 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதேபோல் கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துவிட்டது. உ.பி.யில் இன்னும் 5 கட்ட தேர்தல் நடத்தப்பட வேண்டும். பஞ்சாப், மணிப்பூருக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலை முன்னிட்டு பிரசாரம் அனல் பறக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் பெரும் படையே களத்தில் இறங்கி உள்ளது. இன்னொரு பக்கம் பாஜகவுக்கு கடும் போட்டியை தந்து கொண்டிருக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். தேர்தல் களத்தில் காணாமல் போன பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்கின்றன. ஆனால் மனம் தளராமல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள் இரண்டிலுமே இன்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் ஃபாசில்கா, உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications