தேசத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி
சண்டிகர்: இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான பஞ்சாப் முன்னாள் முதல்வரும் சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவருமான மறைந்த பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பஞ்சாப் மாநிலத்தின் அரசியல் முகங்களில் முதன்மையானவர் பிரகாஷ் சிங் பாதல்.. 1970-ம் ஆண்டு தமது 43 வயதில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றவர். நாட்டின் முதல்வர் பதவியை கைப்பற்றி முதல் இளந்தலைவர் என்ற சரித்திரத்தைப் படைத்தவர் பாதல். 2017-ம் ஆண்டு 5-வது முறையாக முதல்வர் பதவியை நிறைவு செய்தார் 90 வயதில்.. இந்தியாவில் முதல்வர் பதவி வகித்த மூத்தவர் என்ற மற்றொரு சரித்திரத்தையும் எழுதினார் பெருந்தகையாளர் பாதல்.

பஞ்சாப் மாநில அரசியலையே மையமாக கொண்டு செயல்பட்டார். சீக்கியர்களுக்கான உரிமைகள் தொடர்பாக பேசிய அதே பிரகாஷ் சிங் பாதல், தேசிய இன சித்தாந்தத்துக்கு எதிரான இந்துத்துவா கொள்கை பேசும் பாஜகவுடன் ஆழமான கூட்டணி உறவை கொண்டிருந்தது வரலாற்றின் முரண். 1957-ல் காங்கிரஸில் அரசியல் வாழ்க்கையை தொடங்கினாலும் பின்னர் காங்கிரஸின் பரம வைரியாக உருவெடுத்ததால் இயல்பாகவே பாஜகவின் கரம்பிடிக்க வேண்டிய கட்டாயம் பாதலுக்கு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலத்தின் நெல்சன் மண்டேலா என்றெல்லாம் கூட பாதல் அழைக்கப்பட்டார். அவர் 17 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார் என கூறப்படுவது உண்டு. ஆனால் 5 ஆண்டுகள்தான் சிறைவாசம் அனுபவித்தார் என்கிற விமர்சனமும் உண்டு. பாதல் கடைபிடித்த குடும்ப அரசியல் அல்லது வாரிசு அரசியல் பெரும் சர்ச்சையாகவும் விமர்சனத்துக்குரியதாகவும் மாறியது.

இப்படியான அரசியல் முகங்கள் கொண்ட பிரகாஷ் சிங் பாதல் வயது மூப்பு, உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று சண்டிகர் சென்று பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications