Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கள் மீது தவறில்லை.. மோடி நிகழ்ச்சிக்கு கூட்டம் வராததால் பழிபோடுகிறார்கள்: பஞ்சாப் முதல்வர் சுளீர்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பஞ்சாபில் பிரதமர் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தங்கள் மீது தவறு இல்லை என்றும் திட்டமிட்டபடி கூட்டத்துக்கு மக்கள் வராததால் பாஜகவினரே திட்டமிட்டு பேரணியை நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். இதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால் அப்பகுதியில் விவசாயம் காரணமாக சாலை மறிக்கப்பட்டு இருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்பாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது.

இதையடுத்து பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் இது ஒரு விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும் எனவும் மாற்று பயணத்திற்காக பிரதமர் சாலை வழியாக செல்லும் நேரும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் எனக் கூறினர்.

பாஜக குற்றச்சாட்டு

பாஜக குற்றச்சாட்டு

இது குறித்து பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, பஞ்சாப் மாநிலத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க இருந்த பிரதமரின் வருகை சீர்குலைந்தது வருத்தமளிக்கிறது எனவும், பேரணியில் மக்கள் கலந்து கொள்வதை தடுக்குமாறு மாநில காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் இதுகுறித்து முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள மறுத்து விட்டார் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

பஞ்சாப் முதல்வர் விளக்கம்

பஞ்சாப் முதல்வர் விளக்கம்

இந்நிலையில் முதல்வரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விளக்கம் அளித்துள்ள பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தங்கள் மீது தவறு இல்லை எனவும் இது பாஜகவின் திட்டமிடப்பட்ட செயல் என கூறியுள்ளார். இதுகுறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரபல செய்தி சேனல் ஒன்றிடம் பேசிய முதல்வர் சன்னி , பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை எனவும், பிரதமர் மோடி விமானம் மூலம் வர திட்டமிட்டிருந்தார், ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை வழியாக வந்தார் என கூறியுள்ளார்.

Recommended Video

    பாதுகாப்பு குளறுபடியால் பாலத்தில் நிறுத்தப்பட்ட PM Modi-ன் கார்!
    பொய்யான சாக்குபோக்கு

    பொய்யான சாக்குபோக்கு

    பிற்பகல் 3 மணிக்குள் சாலைகளில் இருந்து செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்களிடம் தான் கோரிக்கை விடுத்திருந்ததாக கூறிய பஞ்சாப் முதல்வர் சன்னி, பிரதமரிப் நிகழ்ச்சிக்கு 70,000 பேருக்காக நாற்காலிகளை பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தார்கள் எனவும் ஆனால் 700 பேர்தான் நிகழ்சிக்கு வந்திருக்கிறார்கள் என்றார். இதன் காரணமாகவே அவர்கள் மழை என்ற சாக்குப்போக்கு மற்றும் மற்ற காரணங்களை கூறி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளனர் எனக் கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+