அந்த ஒரே ஒரு வீடியோதான்.. சித்துவின் ஒட்டுமொத்த சி.எம். கனவை சிதைத்து போட்டது காங்கிரஸ்!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித்சிங் சன்னிதான் என்பதை ஒரு வீடியோ மூலமாக சூசகமாக அறிவித்துள்ளது காங்கிரஸ். இதனால் முதல்வர் வேட்பாளர் கனவில் மிதந்த மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து தரப்பு பெரும் ஏமாற்றத்தை எதிர்கொண்டிருக்கிறது.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. பின்னர் பஞ்சாப் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று பிப்ரவரி 20-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது தலைமை தேர்தல் ஆணையம். மார்ச் 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

காங்கிரஸ் உட்கட்சி பூசல்
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கின்றன கருத்து கணிப்புகள். பஞ்சாப் காங்கிரஸில் தொடரும் உட்கட்சி பூசல்களால் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பஞ்சாப் தேர்தலுக்கான வேட்பாளர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த வேட்பாளர் பட்டியல் விவகாரத்திலும் கடும் அதிருப்தி நிலவுகிறது.

காங். முதல்வர் வேட்பாளர் யார்?
இன்னொரு பக்கம் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் குழப்பம் நிலவுகிறது. முதல்வர் பதவி கனவில் நீண்டகாலமாக காய் நகர்த்தி வருகிறார் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து. அண்மையில், பஞ்சாப் மக்கள்தான் முதல்வரை தேர்வு செய்வார்கள்; காங்கிரஸ் மேலிடம் அல்ல என பகிரங்கமாக கலகக் குரல் எழுப்பி இருந்தார். இது காங்கிரஸில் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் சித்துவின் இந்த சேட்டையை காங்கிரஸ் மேலிடம் ரசிக்கவே இல்லை எனவும் கூறப்பட்டது.

வீடியோவில் சூசகம்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர், தற்போதைய முதல்வர் சரண்ஜித்சிங் சன்னிதான் என்பதை சூசகமாக அறிவிக்கும் வீடியோ ஒன்றை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. பஞ்சாப் தேர்தலுக்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், சரண்ஜித் சிங் சன்னி குறித்து நடிகர் சோனு சூட் புகழ்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ ரீ ட்வீட் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சோசியல் மீடியா டீம்தான் இந்த புரோமா வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சியில் சித்து கோஷ்டி
இதன் மூலம் முதல்வர் வேட்பாளர் கனவில் இருக்கும் நவ்ஜோத்சிங் தரப்புக்கு பெருத்த ஏமாற்றத்தை காங்கிரஸ் கொடுத்திருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். எப்போதும் சக நிர்வாகிகள், கட்சியின் மூத்த தலைவர்களுடன் மல்லுக் கட்டிக் கொண்டே இருப்பவர் சித்து. இதனால்தான் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காமல் சரண்ஜித் சிங் சன்னியையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது காங்கிரஸ் மேலிடம் என்கின்றன டெல்லி தகவல்கள். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications