பொய் வாக்குறுதியை விரும்பினால் மோடி பேச்சைக் கேளுங்கள்: பஞ்சாப்பில் ராகுல் காந்தி அதிரடி!
சண்டிகர்: பொய் வாக்குறுதிகளை விரும்பினால் மோடி, கெஜ்ரிவால், பதால் பேச்சைக் கேளுங்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், மீண்டும் ஆட்சிக்கு வர தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தல், வரும் பிப்ரவரி மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றிக்காக, ராகுல் காந்தி இன்று பஞ்சாப் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

ராகுல் காந்தி
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, ''ஒருபோதும் நான் பொய் வாக்குறுதிகளை கொடுக்க மாட்டேன். உங்களுக்கு பொய் வாக்குறுதி வேண்டுமானால் பிரதமர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் பதால் பேச்சுகளைக் கேளுங்கள். அவர்கள் தான் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார்கள்.

15 லட்சம்
பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாக சொன்னார். இதுவரை ஒருவருக்குக்கூட அந்த பணம் போய் சேரவில்லை. அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கு இரண்டு கோடி வேலைகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் இப்போது நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. அதைப்பற்றி மோடி ஒருமுறை பேசவில்லை.

எச்சரித்தேன்
அடுத்து நடுக்கப்போவது குறித்து நான் பலமுறை எச்சரித்தேன். யாரும் என்பேச்சை கேட்கவில்லை. கேலி செய்தார்கள். கொரோனாவை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறினேன், யாரும் கேட்கவில்லை. பிரதமர் எல்லோரையும் கைதட்ட சொன்னார். அதேதான் பஞ்சாப் போதைப்பொருள் விவகாரத்திலும் நடந்தது. 2013ல் பஞ்சாப் இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதாக சொன்னேன். பாஜகவும், அகாலி தளமும் என்னைக் கேலி செய்தார்கள்.

காங்கிரஸ்
பஞ்சாப் தேர்தல் களத்தில், தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சி வலுவாக இருந்தாலும், ஆம் ஆத்மி கட்சி இவர்களுகு பலத்த போட்டியைக் கொடுக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து பஞ்சாப்பில் பிரசாரம் செய்து வருகிறார். பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண் ஜித் சிங் சன்னியே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் நவ்ஜோத் சிங் அதிருப்தியில் இருக்கிறார். இதையெல்லாம் மீறி காங்கிரஸ் பஞ்சாப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications