Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இவ்வளவு வெயிட்டா இருக்கீங்க? 153 கிலோ கைதி.. உடனே ஜாமீன் வழங்கிய நீதிபதி.. சுவாரசிய வழக்கு

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: பல கோடி ரூபாய் மோசடி புகாரில் சிக்கிய ஒருவருக்கு, அவர் 153 கிலோ இருக்கும் ஒரே காரணத்துக்காக பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மேலும், உடல் பருமனை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்றும், அது பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைந்துவிடும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

பண மோசடி குற்றவாளி என்று மட்டும் பார்க்காமல், அவருக்கு இருக்கும் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகிய நீதிபதிக்கு மனித உரிமை ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

பல கோடி ரூபாய் மோசடி

பல கோடி ரூபாய் மோசடி

ஹரியாணாவை சேர்ந்தவர் சஞ்சீவ் பத்ரா (50). போலி நிதி நிறுவனத்தை நடத்தி, மக்களை அதில் முதலீடு செய்ய வைத்து ரூ.3,000 கோடி மோசடி செய்த வழக்கில் இவரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் மூலம் 33 லட்சம் பேரிடம் பணம் வாங்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. இந்த மோசடியில் குற்றவாளிக்கு உதவியதாக சஞ்சீவ் பத்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு கைமாறாக ரூ.53 கோடி இவர் பெற்றிருப்பதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த ஓராண்டாக சஞ்சீவ் பத்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

'சிறையிலேயே இறந்துவிடுவேன்'

'சிறையிலேயே இறந்துவிடுவேன்'

இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சஞ்சீவ் பத்ரா, பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கு அடிக்கடி உடல்நிலை மோசமடைவதாகவும், எத்தனை முறை சிறை மருத்துவமனைக்கு சென்றாலும் உடல்நிலை தேறவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். மேலும், தொடர் சிகிச்சை பெற்றால் மட்டுமே உடல்நிலை சீராகும் என்றும், இல்லையெனில் சிறையிலேயே நான் இறந்து போவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் தனது மனுவில் சஞ்சீவ் பத்ரா கூறியிருந்தார்.

'ஜாமீன் கொடுக்கக்கூடாது'

'ஜாமீன் கொடுக்கக்கூடாது'

ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர்களோ சஞ்சீவ் பத்ராவுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என வாதிட்டனர். "பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக சஞ்சீவ் பத்ரா உள்ளார். எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. இதுபோன்ற பெரிய மோசடியில் சிக்கியவர்களுக்கு உடல்நலனை காரணம் காட்டி ஜாமீன் வழங்கக்கூடாது என சட்டவிரோத பணப்பரிவர்த்தன சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது" என அவர்கள் வாதிட்டனர்.

"உடல்பருமன் மோசமானது.."

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சஞ்சீவ் பத்ராவை பார்த்து "நீங்கள் எவ்வளவு கிலோ இருப்பீர்கள்" எனக் கேட்டார். அதற்கு அவர் 153 கிலோ என பதிலளித்தார். இதையடுத்து நீதிபதி கூறுகையில், "உடல்பருமன் சாதாரண பிரச்சினை அல்ல. அதுதான் எல்லா நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம். அதனால்தான் அவருக்கு சர்க்கரை வியாதியும், ரத்த கொதிப்பும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. உடல்நலக்குறைவை காரணமாக கூறிதான், ஜாமீன் வழங்கக்கூடாது என சட்டம் கூறுகிறது. ஆனால், சஞ்சீவ் பத்ராவுக்கு வந்திருப்பது உடல்நலக்குறைவு அல்ல. பெரிய உடல்நலப் பிரச்சினை. அதற்கு முறையாக தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். அந்த வசதி சிறையில் இல்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது" என நீதிபதி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+